பிரதமர் மோடியோட நண்பர் அவர்.. ஈஷா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு.. சீமான் சவால்
சென்னை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடி அவருடைய நண்பர் என்றும், ஈஷா யோகா மையத்தின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில், எதுவும் பண்ண முடியாது. ஏனென்றால் பிரதமர் மோடி அவருடைய நண்பர். அவர் வந்து மணி அடித்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு செல்வார். இதில் நாம பேசி என்ன பலன் இருக்கிறது. எதுவும் மாறிவிடப் போகிறதா?.. இந்த கட்சி ஆட்சிகளுக்கு தெரியாமல் அவர் அந்த இடத்தில் ஈஷா யோகா மையத்தை அமைத்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா?
இந்த நாட்டில் உள்ள நச்சு திட்டங்கள், மீத்தேன், ஈத்தேன், அணு உலை, ஸ்டெர்லைட் எல்லாம் இந்த பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரியாமல் வந்துவிட்டதா?... விடுதலைக்கு பிறகு பெரும்பாலும் ஆட்சி செய்தது காங்கிரஸ், கொஞ்சம் கொஞ்சம் மற்ற கட்சிகள் இருந்திருக்கலாம். இப்போது பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. ஒரு 20 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது.
இந்த 2 கட்சிகள் திணித்ததாக இருக்கலாம். ஆனால் இதனை ஏற்று தன் நிலத்தில் அனுமதித்தது யார்?.. ஏதோ ஒன்னு நடந்துருச்சு. அது மாதிரி தான் இது. ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அரசே இதை மறுத்து சொல்கிறது. இல்லை இல்லை ஆக்கிரமிக்கவில்லை என்று.
நாம் வேண்டுமால் இப்படி பேசிக்கொள்ளலாம். அவர் கூப்பிட்டால் மினிஸ்டர் வருகிறார். பிரதமர் வருகிறார். உங்களால் இப்போது மோடியுடன் செல்போனில் பேச முடியுமா? ஆனால் அவரால் எப்போது வேண்டுமானாலும் பேச முடியும். அம்பேத்கர் சொன்னதை தான் நீங்கள் இன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரம் மிக வலிமையாக.. இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications