திமுகவிலும் ஒரு "சந்திரபாபு நாயுடு".. கொளுத்தி போட்ட எச்.ராஜா.. பரபரக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பாஜக சீனியர் தலைவர் எச் ராஜா பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆரூடம் தெரிவித்துள்ளார்..

சில தினங்களுக்கு முன்பு, திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

அப்போது, சென்னையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது, மகாராஷ்டிராவில் உத்தரவு தாக்கரேவை எதிர்த்து வெளியே வந்தார் ஏக்நாத் ஷிண்டே. ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மகாராஷ்டிராவில் இது நடந்தது. இங்கேயும் அது போன்ற காலம் வரும்" என்றார்.

 ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியும் உடனடியாக பதிலளித்தார்.. "அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பேசக்கூடியவர்... திமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி ஒரு நாளும் பலிக்காது.. அவரது பேச்சை திமுகவில் யாருமே பொருட்படுத்துவதில்லை" என்று கூறியிருந்தார்.. இப்போது, ஏக்நாத் ஷிண்டாவை விட்டுவிட்டு சந்திரபாபு நாயுடுவை வைத்து, தமிழக பாஜக திமுகவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.

 ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்து ஆறு நாட்கள் கடந்து விட்டன.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு உடனே ஓடினார்கள் இந்த திமுகவினர்... ஆனால், இறந்துபோன மாணவி இந்து என்பதால் அவர்கள் இன்னும் போகவில்லை.. மாணவி குடும்பத்துக்கு உடனடியாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சைக்கிள்

சைக்கிள்

சைக்கிளில் போவது, உடனே அதை போட்டோவாக எடுத்து போடுவதும்தான் டிஜிபியின் வேலையா? ஒ என்ன பண்ணிட்டு உங்க போலீஸ்? உள்ளே எப்படி ஆட்கள் போனாங்க? அதை தடுக்க உங்களால முடியலயா? சைக்கிள்ல போறது, செல்பி எடுக்கிறது, இதுதான் டிஜிபிக்கு வேலையாம்.. வேற எதுவுமே அதிகாரம் இல்லையாமே.. தமிழக நிர்வாகமே செத்துப்போச்சு.

 என்.டி. ராமாராவ்

என்.டி. ராமாராவ்

ஆந்திராவில் என்டி ராமாராவ் முதல்வராக இருந்தபோது அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினார்.... அதுபோலவே, தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை உள்ளது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே திமுகவில் உட்கட்சி பூசல்கள் தலைவிரித்தாடி வரும் நிலையில், குடும்ப அரசியல் என்ற விமர்சனங்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில், எச்.ராஜாவின் இந்த பேச்சு மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+