சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பாராமல் உருவான தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் எப்போது மழை பெய்யும்? வெதர்மேன் வார்னிங்!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வங்காள விரிகுடாவில் உள்ளது. இதனால் ஈரப்பதமான காற்று சென்னைக்கு தள்ளப்படும். அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிற்கு லேசான சின்ன மழை பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது. பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.

மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது.

அஸ்வின் போல அதிரடி இன்னிங்ஸ்? வானிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அப்டேட்! அஸ்வின் போல அதிரடி இன்னிங்ஸ்? வானிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல்

தென்மேற்கு வங்கக்கடல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல்கடந்த மாதம் கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அப்போதும் தீவிர காற்று வீசியதே தவிர மழை பெரிதாக பெய்யவில்லை. இந்த நிலையில்தான் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வு பகுதி உருவக்கி உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி உள்ளது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 3 நாட்களில் முழுமையாக நகர்ந்து இருக்கும். ஆனால் இதனால் பெரிய மழை இருக்காது. இந்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. இன்று பிற்பகலுக்கு பின் வலிமை அடைந்து இது தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கணிப்பு

கணிப்பு

இது தொடர்பாக நேற்று வெதர்மேன் வெளியிட்டுள்ள கணிப்பில், MJO என்று அழைக்கப்படும் madden julian oscillation அலைவு காரணமாக இந்த அரிதான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக தெரிவித்துள்ளார். அதில், ஜனவரி 29, 30 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். அதேபோல் பிப்ரவரி 5/6 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். தென் தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்யும். இலங்கையில் மிக கனமழை பெய்ய போகிறது. சென்னையில் 29 மற்றும் 31 தேதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

போஸ்ட்

போஸ்ட்

இதையடுத்து தற்போது அவர் செய்துள்ள போஸ்டில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வங்காள விரிகுடாவில் உள்ளது. இதனால் ஈரப்பதமான காற்று சென்னைக்கு தள்ளப்படும். அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிற்கு லேசான சின்ன மழை பெய்யும். 29ம் தேதி இந்த பகுதிகளில் லேசான மழை பெய்யும். தமிழ்நாட்டின் மொத்த கடலோர பகுதிகளுக்கும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையில் கரையை கடக்கலாம். அல்லது தெற்கு நோக்கி நகரலாம். டெல்டா மாவட்டங்களிலும் இதனால் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

English summary
With Low pressure in Bay and with moisture push Chennai and KTCC belt to see isolated short spells says Weatherman Pradeep John.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X