பொன்முடி+ 4 அமைச்சர்கள்.. தேர்தல் நேரத்தில் நெருக்கடி! ஒரே தீர்வு இதுதான்.. அடித்து சொல்லும் தலைகள்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, பொன்முடி வழியாக திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இன்னும் சில அமைச்சர்கள் மூலம் கட்சி மேலும் சிக்கலை சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதிலிருந்து திமுக மீள சில வழிகளை அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
நெருக்கடி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுக்கும் நெருக்கடி அதிகரித்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும், அதிகமான எம்பி சீட்களை ஜெயிக்க வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 40க்கு 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு தேர்தலை பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. ஆனால், அதற்குள் செந்தில் பாலாஜி, பொன்முடி வழியாக கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

செந்தில் பாலாஜி: என்னதான் திமுக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் கொங்கு பகுதி என்பது அக்கட்சிக்கு மிகுந்த சவாலானதாகவே இருந்தது. இந்த கள நிலவரத்தை மாற்றியமைக்க களமிறக்கப்பட்டவர்தான் செந்தில் பாலாஜி. இவருடைய அதிரடி பணியால் திமுக திகு திகுவென அங்கு வளர தொடங்கியது. இப்படி இருக்கையில்தான் திடீரென களத்தில் குதித்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் திடீர் ரெய்டு நடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை கைது செய்துதது.
இது திமுகவுக்கு பலத்த அடிதான். இருந்தாலும் நிலைமையை சமாளிக்க சீனியர் அமைச்சர்களை முழுவீச்சில் களத்தில் இறக்கியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமைச்சர்கள் களப்பணியை தீவிரப்படுத்தினர். இந்த சமயத்தில்தான் சீனியர்களில் ஒருவரான பொன்முடி மீதான வழக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியது.
பொன்முடி வழக்கு: கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தீர்ப்பு: இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.
நெருக்கடி: இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இது திமுகவுக்கு மற்றொரு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக காலியாகி வருவது மக்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடும்.
4 அமைச்சர்கள்: இவர்கள் இருவர் மட்டுமல்லாது இன்னும் லிஸ்டில் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதாவது கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதேபோல கடந்த 2006-2011 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை, சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்திருந்தது.
சவால்: மட்டுமல்லாது கடந்த 2006- 2011வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீதும் 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளிலிருந்து மூன்று அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளை தானாக முன்வந்து மீண்டும் விசாரித்த வருகிறது. ஆக இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது தவிர அமைச்சர் எ.வ.வேலு, எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது.
இது எல்லாம் திமுகவுக்கு காத்திருக்கும் சவால். ஒருவேளை அடுத்தடுத்து அமைச்சர்களும் சிறை செல்ல நேர்ந்தால் அது கட்சியின் செல்வாக்கில் பெரும் ஓட்டையை ஏற்படுத்திவிடும். அதனால், இதிலிருந்து தப்பிக்க சில அதிரடிகளை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயமும் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
புத்துயிர்: ஒருவேளை, அமைச்சரவை மாற்றப்பட நேர்ந்தால், வழக்கம்போல் சீனியர்களுக்கு பொறுப்பை வழங்காமல், இளையவர்களை அமைச்சர் பொறுப்புகளுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவருடைய பணியின் வேகம், மற்ற அமைச்சர்களை காட்டிலும் தீவிரமாக இருக்கிறது. மீறி எழும் விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளித்து வருகிறார். இதன் மூலம் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, மழை வெள்ளத்தின்போது, உதயநிதியின் செயல்பாடுகள் பலராலும் கவனிக்கப்பட்டது. திமுக அரசுமீது விமர்சனங்கள் இருந்தபோதிலும், உதயநிதியின் களப்பணியை யாராலும் குறை சொல்ல முடியவில்லை. எனவே, இளைஞர்கள், புதியவர்கள் என்பதையும் தாண்டி, களப்பணிகள் மட்டுமே மக்களை ஈர்த்து வருகின்றன. ஆனாலும், இப்போதுள்ள சூழலில் கட்சியின் செல்வாக்கை மீட்க உதயநிதியை போலவே மேலும் பலர் தேவைப்படுகிறார்கள். அந்தவகையில், இளையவர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் எண்ணமாக உள்ளது. அதே நேரத்தில் இவர்கள், கட்சி கொள்கைகளில் துடிப்புடன் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருபக்கம் பாஜகவையும், மறுபக்கம் அதிமுகவையும் சமாளித்து, நிலவும் அதிருப்திகளையும் களைந்து, மக்களின் நன்மதிப்புகளை பெற வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications