சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதறும் கூட்டணிகள்! மாறும் காட்சி! குறுக்கே வந்த நாம் தமிழர்.. "இது" மட்டும் நடந்தால்.. எல்லாம் ஓவர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் கலவரம் ஆகி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதேபோல் இன்னொரு பக்கம் பாஜக, பாமக, அதிமுக ஆகியவை கூட்டணி வைத்தன.

இதில் திமுகவின் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி இன்னும் அப்படியே உடையாமல் இருக்கிறது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக - அதிமுக - பாமக கூட்டணி முறிந்துவிட்டது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? தமிழ்நாட்டில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு -மீனவர்களுக்கு எச்சரிக்கை இதுக்கு ஒரு எண்டே இல்லையா? தமிழ்நாட்டில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு -மீனவர்களுக்கு எச்சரிக்கை

கூட்டணி

கூட்டணி

இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கூட்டணிக்கு அடிபோட்டு வருவதாக செய்திகள் வலம் வர தொடங்கி உள்ளன. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவிற்கு வந்துவிட்டதாக செய்திகள் வலம் வர தொடங்கி உள்ளன. காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டால் மதசார்பற்ற மக்களின் வாக்குகள் கிடைக்கும், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்று அதிமுக நம்புகிறதாம். அதிமுக தரப்பே இந்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏன்?

ஏன்?

அதன்படி பாஜகவிடம்.. நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம். ஒற்றை தலைமையை ஆதரியுங்கள். இல்லையென்றால் நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே சென்றுவிடுவோம். காங்கிரஸ் கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறோம் என்று பாஜகவிற்கு செக் வைக்கும் விதமாக, பாஜகவிற்கு வார்னிங் கொடுக்கும் விதமாக அதிமுக இந்த கூட்டணி விவாதத்தை கிளப்பி விட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்க தொடங்கி உள்ளன.

கட்சிகள்

கட்சிகள்

ஒருவேளை.. ஒருவேளை காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைந்தால் மற்ற சிறிய கட்சிகள் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளன. அதாவது மதிமுக, பாமக, விசிக என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும். இவர்கள் எந்த கூட்டணியில் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணி தொடருமா அல்லது உடையுமா அல்லது அதிமுக மெகா கூட்டணி அமைக்குமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி உள்ளார். இதனால் நாம் தமிழர் பற்றிய விவாதங்களும் எழுந்து உள்ளன.

நாம் தமிழர்

நாம் தமிழர்

திராவிட கட்சிகளுடன் நாம் தமிழர் இதுவரை கூட்டணி வைத்தது இல்லை. முக்கியமாக திமுகவை நாம் தமிழர் மிக தீவிரமாக எதிர்த்து வருகிறது. அதிமுகவுடன் கூட கொஞ்சம் நட்பாக இருக்கும் நாம் தமிழர் திமுகவை மிக கடுமையாக எதிர்க்கிறது. இதனால் ஒருவேளை அதிமுக மெகா கூட்டணி அமைக்க முற்பட்டால் அதில் நாம் தமிழர் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 5 சதவிகித வாக்கு வங்கி அளவிற்கு நாம் தமிழரிடம் பலம் இருக்கிறது.

பலம் என்ன?

பலம் என்ன?

இதனால் அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் நாம் தமிழர் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நாம் தமிழர் இணையும் பட்சத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்படும். ஆனால் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் நாம் தமிழர் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் கட்சியை நாம் தமிழர் மிக தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் நாம் தமிழர் ஒரு கட்சியாக இணைவதற்கு வாய்ப்பு குறைவுதான் .

English summary
With whom Naam Tamilar join an alliance if AIADMK form a mega alliance in Tamil Nadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X