பல்லாவரத்தில் பெண் தற்கொலை.. வேலையிழந்த கணவர் வேலைக்கு அனுப்ப முயன்றதால் விபரீதம்
சென்னை: பல்லாவரம் அருகே கப்பலில் பொறியாளராக உள்ளவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவா் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு அனுப்ப சொன்னதால் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணி பெரியாா்நகரில் வசிப்பவா் ஜெயசந்திரன் (38). இவருடைய மனைவி திவ்யா(35). இவா்களுக்கு 7 வயது மகள், 4 வயது மகன் உள்ளனா். ஜெயசந்திரன் தனியாா் கப்பலில் இன்ஜினியராக பணியாற்றி வந்தாா்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக இவருக்கு வேலை இல்லை. இதனால் மனைவி திவ்யா எம்காம் பட்டதாரி என்பதால் அவரை எதாவது வேலைக்கு அனுப்ப ஜெயசந்திரன் முயற்சித்தாா்.

பிரச்சினை
திவ்யாவிற்கு அதில் விருப்பம் இல்லை. இதனால் கணவன்,மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று இரவும் இவா்களுக்குள் சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு திவ்யா படுக்கை அறையில் தூக்கில் தொங்கினாா்.

திவ்யா உயிரிழப்பு
உடனே ஜெயசந்திரன் கயிறை அறுத்து அவரை காப்பாற்றி, குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றாா். அங்கு திவ்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

சந்தேக மரணம்
இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனா். அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சி
உண்மையிலேயே திவ்யா வேலைக்கு செல்ல பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்












Click it and Unblock the Notifications