வெரி ஸ்மார்ட்.. சபாஷ் சுஷ்மா.. வேத, மந்திரங்களை ஓதி.. கல்யாணத்தை நடத்துவது யார்ன்னு பார்த்தீங்களா?
பெண் புரோகிதர் ஒருவர் திருமணம் நடத்தி வைத்துள்ளார்
சென்னை: இந்த கால பெண்கள் வெரி ஸ்மார்ட்.. துணிச்சலும் & புதுமையும் விரும்பிகளாக உள்ளனர்.. தங்கள் கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற சுய விருப்பமும், அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யக்கூடிய திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர்... அதற்கு உதாரணம்தான் சுஷ்மா!
இந்து மதம் மிக பழமையானது.. தொன்மையானது.. எத்தனையோ நல்பொக்கிஷங்களை பொதித்து வைத்துள்ள ஊற்று சுரங்கம் அது.. இந்து மதத்தில் பெண் தெய்வங்கள் அதிகம்.. அப்பெண் தெய்வங்களின் மேன்மையும் காலங்காலமாக போற்றத்தக்கதாகவே இருக்கும்.. ஆனாலும் என்னவோ, ஆண் புரோகிதர்தான் எல்லா கல்யாணம், சடங்குகளை செய்து வருகிறார்கள்.
பொதுவாக, புரோகிதர்களாக பெண்கள் இருந்ததில்லை.. அதற்கு குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை.. அதே நேரம் பெண்களை புரோகிதர்களாக அனுமதிக்க கூடாது என்ற காரணமும் இந்து மதத்தில் வலியுறுத்தி சொல்லப்படவும் இல்லை என்றே தெரிகிறது.. ஆனால் பெண் புரோகிதர்கள் இருந்துள்ளனர் என்பது இந்து சமய நூல்களில் சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேத மந்திரங்கள்
ஆனால் நாம்தான் எந்த பெண் புரோகிதரையும் இதுவரை பார்த்ததுகூட கிடையாது.. இப்போது ஒரு பெண் புரோகிதர் பற்றின பேச்சுதான் பலமாக அடிபடுகிறது.. அதுவும் தமிழகத்தில்.. முதன்முறையாக அப்பெண் புரோகிதர் ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளார்.. அட்சர சுதி சுத்தமாக.. பிசிறு தட்டாமல்.. தடுமாற்றமே இல்லாமல்.. வேதங்களை ஓதி.. மந்திரங்களை உச்சரித்து வெகு சிறப்பாக ஒரு திருமணத்தை முடித்து வைத்துள்ளார்.

வழக்கறிஞர்
இப் பெண் புரோகிதர் பெயர் பிரமரம்ப மகேஸ்வரி.. மைசூரை சேர்ந்தவர்!!! சுஷ்மா ஹரினி என்பது மணப்பெண்ணின் பெயர், இவரது தாய் மொழி தெலுங்கு... வக்கீலாக உள்ளார்!!! மணமகன் பெயர் விக்னேஷ்.. மாப்பிள்ளை தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. இருவரும் காதலர்கள்... தங்கள் கல்யாணத்தில் ஏதாவது புதுமையாக, வித்தியாசமாக வேண்டும் என்று மணமகள் சுஷ்மா ஆசைப்பட்டார்.

நாதஸ்வரம்
அதனால் பெண் புரோகிதர்தான் தன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.. அது மட்டுமல்ல.. நாதஸ்வரம் வாசிப்பவரும் பெண்தான்.. மிருதங்கம் வாசிப்பவரும் பெண்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.. அப்படி தேடியபோதுதான், மைசூர் பெண் புரோகிதரின் விவரம் தெரிந்தது.. வேத மந்திரங்களை முறையாக பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றவர்தான் பிரமரம்ப மகேஸ்வரி.

சென்னையில் திருமணம்
தன் ஆசையை அவரிடம் சொல்லி "நீங்கதான் எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்" என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். அதன்படியே பிரமரம்ப மகேஸ்வரி திருமணம் செய்ய ஒப்புதல் தந்தார்.. சென்னையில் தக்ஷின் சித்ராவில் திருமணம் கோலாகலமாக நடந்தது.. கல்யாணத்துக்கு வந்தவர்கள் பொண்ணு மாப்பிள்ளையைவிட, புரோகிதரைதான் கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

ஒரே வருத்தம்
ஆனால், மேளம், மிருதங்கம், நாதஸ்வரம் வாசிக்க பெண்கள் உடனடியாக கிடைக்காமல் போய்விட்டனர்.. இதுதான் சுஷ்மாவுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பெண் புரோகிதர் மந்திரம் ஓதி கல்யாணம் செய்து வைப்பது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.. வடமாநிலங்களில் ஒன்றிரண்டு பெண் புரோகிதர்கள் இதற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனராம்.. ஆனால் நமக்கு தெரியவந்துள்ளது இதுதான் முறை.

அர்த்தம்
இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், பெண் புரோகிதர் மந்திரங்களை அப்படியே மனப்பாடமாக ஒப்புக்கவில்லை.. மந்திரத்தை மணமகன் - மணமகளுக்கு சொல்லி, அதை திரும்ப சொல்ல சொன்னார்.. அப்போது, அந்த மந்திரத்தின் தனித்துவத்தையும், முக்கியத்துவத்தையும், முக்கியமாக அதன் அர்த்தத்தையும் ஆங்கிலத்தில் எடுத்து சொன்னார்.. அந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட மணமக்கள், மந்திரத்தை திருப்பி சொல்லும்போது, பூரிப்பில் மிதந்தனர்!

வித்தியாசம்
இதை பற்றி கல்யாண பெண் சுஷ்மா சொல்லும்போது, "ஒரு பெண் புரோகிதர் சேலத்தில் ஏற்கெனவே திருமணத்தை நடத்திய சம்பவங்கள் நடந்தது.. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடந்தது. அதனால்தான், வேறுபட்ட இரு சமூகங்களுக்கிடையேயான எங்கள் திருமணத்தை இப்படி நடத்த முடிவு செய்தேன்" என்கிறார்.

சபாஷ்!
எப்படியோ.. சுஷ்மா நினைத்தபடியே இந்த கல்யாணத்தை வித்தியாசமாக நடத்தி விட்டார்.. மணமக்களுக்கு நம் பரிபூரண நல்வாழ்த்துக்கள்.. மணமகள் ஆந்திரா, மணமகன் தமிழ்நாடு, புரோகிதர் மைசூரு!! மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஓர் ஆண்களின் கோட்டையாகவே இருந்து வருவதை தூள் தூளாக தகர்த்து உடைத்துள்ளார் சுஷ்மா.. உண்மையிலேயே இதுதான் சமதர்ம சமுதாயம்!!

சபாஷ்!
எப்படியோ.. சுஷ்மா நினைத்தபடியே இந்த கல்யாணத்தை வித்தியாசமாக நடத்தி விட்டார்.. மணமக்களுக்கு நம் பரிபூரண நல்வாழ்த்துக்கள்.. மணமகள் ஆந்திரா, மணமகன் தமிழ்நாடு, புரோகிதர் மைசூரு!! மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஓர் ஆண்களின் கோட்டையாகவே இருந்து வருவதை தூள் தூளாக தகர்த்து உடைத்துள்ளார் சுஷ்மா.. உண்மையிலேயே இதுதான் சமதர்ம சமுதாயம்!!












Click it and Unblock the Notifications