பெண் போலீசுக்கு சலுகை.. மகப்பேறு விடுப்பு முடிந்து வருவோருக்கு 3 ஆண்டு சொந்த ஊரில் பணி - ஸ்டாலின்
சென்னை: மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் போலீசுக்கு அவர்கள் விரும்பத்தின்பேரில் பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் சொந்த ஊரிலேயே 3 ஆண்டு காலம் பணி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இன்று சென்னையில் பதக்கம் வழங்கிய முதல்வர் முக ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பணியில் மெச்சத்தகுந்த சேவை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயரிய விருதுகளான ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சுதந்திர தினத்தையொட்டி பதக்கம் வெல்வோரின் பெயர்கள் என்பது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பதக்கம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் விழா தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பதக்கங்களை வழங்கி விழாவில் பேசினார். அப்போது அவர் பெண் காவலர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பெண் காவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:
காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த விழா கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ காவல்துறையின் பங்கு முக்கியமானது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை நான் மனதார பாராட்டுகிறேன். இதுபோன்ற பதக்கங்கள் வழங்க விழா நடத்துவதும் எதற்காக என்றால் மற்றவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கத்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றறை பின்பற்றி அல்லும் பகலும் உழைத்தால் இத்தகைய பாராட்டு கிடைக்கும் என்பதற்கான நிகழ்ச்சி இதுவாகும். கடமையை சரியாக செய்தால் அதற்கான பாராட்டு உங்களை வந்து சேரும். அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த விழா.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே சென்னை காவல்துறை சிறப்பாக இருந்து வருகிறது. 1970ம் ஆண்டில் காவல்துறை நவீனமாக்கியவர் கருணாநிதி. இதனை அப்போது ஐஜியாக இருந்த அருள் குறிப்பிட்டு கூறியுள்ளார். காவல்துறை நவீனமயமாக்க முதல் காவல் ஆணையத்தை கருணாநிதி அமைத்தார். அதன்பிறகு தான் மத்திய அரசால் நவீனமாக்கல் பணி தொடங்கியது.
5வது காவல் ஆணையத்தை அமைத்தது நீதிமன்ற உத்தரவின்படி திராவிட மாடல் அரசு அமைத்துள்ளது.
தமிழக காவல்துறையை நவீனமயமாக்கி வருகிறோம். உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . காவல்துறையில் முதல் முதலாக மகளிரை இடம்பெற செய்தது கருணாநிதி தான். இன்று எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பெண் அதிகாரி தலைமேற்று இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது மகளிர் காவலர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற மனநிறைவோடு இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது குழந்தைகள் பராமரிப்பில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு பணி மூப்புக்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோர், கணவர் வசிக்கும் ஊர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்க கூடிய குற்ற செயல்களை தீர்ப்பதில் பெண் காவலர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்த குற்றங்களை கையாளும் பெண் காவலர்களின் தொழில்முறையை மேம்படுத்தும் வகையில் பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
உங்களுக்கான கடமையும் பொறுப்பும் மிகப்பெரியது. மக்களை காப்பாற்றுவது உங்களின் கடமை. மக்களை பாதுகாப்பது உங்களின் பொறுப்பு. இதனை எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றி தாருங்கள் என்பது தான் எனது வேண்டுகோள். குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமில்லாமல் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாக தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும் என தொடர்ந்து குற்றம் இல்லாத மாநிலமாக, போதை பொருள் இல்லாத மாநிலமாக, பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக நம்ம மாநிலம் உருவாக வேண்டும். குற்றங்களை எங்கும் யாராலும் நடத்தப்படக்கூடாது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications