Black Monday.. மொத்த உலகையே உலுக்கிய "கருப்பு திங்கள்".. டிரம்ப்பால் கதறும் பங்குசந்தைகள்.. போச்சு
சென்னை: Black Monday என்ற வார்த்தை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வர்த்தகக் கட்டணங்கள் காரணமாக இன்று திங்கள் கிழமை வர்த்தகம் கடுமையான சரிவுடன் தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர கட்டண விதிப்பு காரணமாக ஆசிய, இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 72122 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.
அமெரிக்கத் தொலைக்காட்சி ஆளுமையும் பொருளாதார நிபுணருமான ஜிம் க்ரேமர், 1987 ஆம் ஆண்டின் "Black Monday எனப்படும் கருப்புத் திங்கள்" ஏற்பட்டது. இதற்கு பிறகு மிக மோசமான ஒரு நாள் மார்க்கெட் வீழ்ச்சியை இந்த திங்கள்.. அதாவது இன்று நாம் சந்திக்க கூடும் என்று எச்சரித்து இருந்தார். அதன்படியே உளம் முழுக்க ஸ்பெயின், அமெரிக்கா , ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா என்று எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக கடுமையாக சரிவை சந்தித்துள்ளன. இன்று உலக அளவில் மார்க்கெட் பாதாளத்திற்கு செல்லும் என்று அவர் கூறி உள்ளார். இதனால் Black Monday இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள பரஸ்பர கட்டணங்கள் காரணமாக மார்க்கெட் இவ்வளவு மோசமாக சரிந்து வருகிறது.

ஏற்கனவே இந்திய மார்க்கெட் சரிவு
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியாலம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
மார்க்கெட் சரியுது
கடந்த 5 நாட்களாக மார்க்கெட் தொடர்ந்து சரிந்த நிலையில் இன்று ஒரே நாளில் மார்க்கெட் 20%க்கும் மேல் சரியாலம் என்ற அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு அடைந்து உள்ளது. DOW JONES பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் டிரம்ப் முடிவுகளால் அந்நாட்டு பங்கு சந்தை 10 ட்ரில்லியன் டாலரை இழந்துள்ளது. ஒரே நாளில்.. ரூ.176 லட்சம் கோடி அமெரிக்க வர்த்தகத்தில் நேற்று சரிந்து உள்ளது. டிரம்ப் விதித்த வரி காரணமாக ஆட்டோமொபைல் துறை தொடங்கி ஐடி துறை வரை எல்லாம் மொத்தமாக வீழ்ந்து உள்ளது.
அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் மார்க்கெட்கள் சரிய தொடங்கி உள்ளன. நேற்று இரவே இந்திய நேரப்படி 11 மணி அளவில் அமெரிக்காவின் பிரபல S&P 500 ஃப்யூச்சர்ஸ் கடுமையான சரிவை சந்தித்தது. இதனால் சந்தை மூலதனத்தில் $2 டிரில்லியன் அழிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த விரைவான சரிவு கிரிப்டோகரன்சி சந்தையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது, Bitcoin (BTC) $68,000 இலிருந்து $64,500 ஆக குறைந்தது. தோராயமாக 5.15% குறைந்துள்ளது Ethereum (ETH) ஆனது $3,200 இலிருந்து $3,040 ஆகவும், 5% வீழ்ச்சியைக் கண்டது.
கணிப்பு
சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.
அழியும் உலக பொருளாதாரம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
-
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications