என்ன கன்றாவி இது.. யாஷ் நடித்த டாக்ஸிக் பட டீசரை பார்த்து கொட்டி தீர்க்கும் ரசிகர்கள்!
சென்னை: கேஜிஎஃப், கேஜிஎஃப் -2 படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ் டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் டீசர் இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்தும் விதமாக இந்த டீசர் இருந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச காட்சிகள் சாதாரண மக்களை மட்டும் இன்றி அவரது ரசிகர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளதாக பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
கேஜிஎஃப் 1 மற்றும் 2 படத்தின் மூலமாக உலகம் முழுக்க பிரபலம் ஆனவர் நடிகர் யாஷ்.. கேஜிஎஃப் 2 திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்தோடு ரிலீஸ் ஆகி இருந்தது. இதில் கேஜிஎஃப் படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் யாஷ் என்ன படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த வந்தது.

நடிகர் யாஷின் டாக்சிக் டீசர்
இதையடுத்து தான் பிரபல இயக்குனர் கீது மோகந்தாஸ் இயக்கத்தில் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரோடெக்ஷன் நிறுவனமானது நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் கேரக்டர் அறிமுகம் தொடர்பான வீடியோக்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வந்தது.
இந்த படத்தில் நடிகைகளாக தாரா சுதாரியா, ருக்மினி வசந்த், நயன்தாரா , கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர். வரும் மார்ச் 19 ஆம் தேதி இந்த படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்சிக் படத்தின் சிறு டீசர் போன்ற வீடியோவை கேவிஎன் நிறுவனம் வெளியிடப்பட்டது.
என்ன கன்றாவி இது..
இந்த வீடியோ இணையத்தில் வெளியான உடனேயே பல லட்சம் வியூவ்ஸ்களை தாண்டியது. அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் யாஷின் லுக் சூப்பராக உள்ளது என்றும், டீசரை பார்க்கும் போது படம் ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வந்தனர்.
எனினும் பலரும் இந்த பட டீசரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படியா ஒரு டீசர் விடுவீங்க.. என்ன கன்றாவி இது.. என விமர்சித்தும் வருகின்றனர். ஆபாசம் இருக்க வேண்டும்.. ஆனால் இப்படியா என்றும், முன்பெல்லாம் இலைமறை காயாக ஆபாசங்கள் தெரியாதமாதிரி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இப்படி பப்ளிக்காக இதை கொண்டு வந்துள்ளது கண்டனத்துக்குரியது எனவும் கூறி வருகின்றனர்.
சென்சார் போர்டின் மீதான கோபத்தை வெளிப்படுத்த
முன்னதாக படத்தின் சிறு சிறு கிளிம்ப்ஸ்கள் வெளியானபோதும் ஆபாசமாகவே இருந்ததாகவும், தற்போது டீசரிலும் அதீத ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், இதனை எப்படி குடும்பத்தோடு, குழந்தைகளோடு பார்க்க முடியும் என்றும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ரசிகர்களை திருப்திப்படுத்தும் காட்சியாக மட்டுமே இது இருக்கிறது எனவும், சாதாரண மக்களை திருப்திப்படுத்தாது என்றும் கூறி வருகிறார்கள். ஒரு சிலர் அவரது ரசிகர்களுக்கே இது பிடிக்காது என்றும் விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே சிலர் விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் சான்று சிக்கலில் இருந்துவரும் வேளையில் இப்படி ஒரு டீசரை கேவிஎன் நிறுவனம் ரிலீஸ் செய்ததை வைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். "சென்சார் போர்டின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதற்காகவே கேவிஎன் நிறுவனம் இப்படி டீசர் வெளியிட்டு இருக்கிறார்கள்" என்று கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications