12 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரிசர்வேசன் செய்யாமல் பயணிக்கலாம் - ஹேப்பி நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை: கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் தல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கினாலும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன.
அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், ஏராளமான பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகினர்.
முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் ரயில்பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும் ரயில்களின் விபரம்:
வண்டி எண் 12639 சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 12640 பெங்களூரு பிருந்தாவன் - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 12675 சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 12676 கோவை - சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
வண்டி எண்16854 விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 16853 திருப்பதி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 16054 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 16057 சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 16058 திருப்பதி சப்தகிரி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் 56640 மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர்
வண்டி எண்56641 மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்(56641)
இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications