22 வயசு திவ்யா.. நெருங்கி வந்து.. மெல்ல உரசி.. அசந்த நேரத்தில்.. திரில் லீலைகள்.. காட்டிதந்த கேமிரா

22 வயது இளம்பெண் திருட்டு சம்பவத்தில் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டத்தில் உரசி கொண்டே நின்று, அசந்த நேரத்தில் காரியத்தை சாதிப்பதுதான் 22 வயது திவ்யாவின் ஸ்பெஷல்.. இப்போது கைதாகி போலீஸ் பிடியில் உள்ளார் திவ்யா!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் யமுனா.. 40 வயதாகிறது.. இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, துணி எடுக்க புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணி கடைக்கு சென்றிருந்தார்.

அப்போது குழந்தைகளையும் தம்முடன் அழைத்து சென்றிருந்தார்.. துணிகளை எடுத்துவிட்டு பில் போடும்போது, பையில் வைத்திருந்த பர்ஸை காணேம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த யமுனா, கடைக்குள்ளேயே சுற்றுமுற்றும் தேடினார்.. கிடைக்கவே இல்லை.

கைப்பை

கைப்பை

இறுதியில் அந்த துணிக்கடையின் மேனேஜரிடம் புகார் சொன்னார்.. "வண்டிக்கு பணம் கொடுத்துவிட்டு கடைக்குள் நுழையும் போது கைப்பைக்குள்தான் பர்ஸ் வைத்தோம். அதுக்குள் எப்படி காணாமல் போனது என்ற தெரியவில்லை.. கடைக்குள்தான் யாரோ திருடியிருக்கிறார்கள்" என்றார்.

இளம்பெண்

இளம்பெண்

இதையடுத்து, கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் அப்போதே ஆய்வு செய்யப்பட்டன.. அதில் இளம்பெண் ஒருவர் யமுனாவையே ஒட்டியே உரசி கொண்டு நின்றதும், பர்ஸை பையில் இருந்து நைஸாக எடுப்பதும் தெரிந்தது.

திவ்யா

திவ்யா

மேலும் அந்த பெண் அதே கடையில் திருடுவதற்காக சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்ததும் தெரிந்தது.. இதையடுத்து, துணிக்கடை ஊழியர்கள் உதவியுடன் திருடிய பெண்ணை கப்பென பிடித்து கொண்டு போய், வேப்பேரி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. இந்த திருட்டு சம்பந்தமாக புகாரும் தரப்பட்டது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெயர் திவ்யா என்றும், வயசு வெறும் 22 தான் என்றும் தெரியவந்தது.

கைது

கைது

பண்டிகை காலம் என்றாலே திவ்யாவுக்கு குஷிதானாம்.. எங்கு மக்கள் கூட்டம் இருந்தாலும் உள்ளே புகுந்து ஆட்டைய போட்டுவிடுவாராம்.. இப்போதைக்கு திவ்யாவிடம் இருந்து 2,770 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைதான அவரிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+