புருஷனை கொன்னுட்டு மீன் வாங்க போன காயத்ரியை.. ஞாபகம் இருக்கா.. அவரோட கள்ளக்காதலன் சிக்கிட்டாராம்
கள்ளக்காதல் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: புருஷனை தன் துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துவிட்டு, மீன் வாங்க போன காயத்ரியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். 28 வயசு. ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி காயத்ரி.
இவர் 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் காது, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பறந்த நிலையில், உடனடி விசாரணை ஆரம்பமானது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் நாகராஜின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், முதல் விசாரணையே நாகராஜ் மனைவி காயத்ரியிடம்தான். "என் புருஷன் தற்கொலை செய்துக்கிட்டார்" என்று போலீசாரிடம் அழுது ஒப்பாரி வைத்தார் காயத்ரி.

காயத்ரி
போலீசாரோ, தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகுதான், காயத்ரி எல்லா உண்மையையும் சொல்ல ஆரம்பித்தார். "எனக்கும், என் புருஷனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது என் புருஷனுக்கு தெரிஞ்சு போயிடுச்சு. அதனால எங்களுக்குள்ள வீட்டில் தகராறு இருந்து வந்தது.

துப்பட்டா
அப்போது கோபத்தில் மகேந்திரனை தீர்த்துகட்டுவதாக சொன்னார். இந்த விஷயம், மகேந்திரனின் மனைவி பானுக்கு தெரிந்துவிட்டது. அதனால் நானும் பானுவும் சேர்ந்து என் புருஷனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். தூங்கி கொண்டிருந்த அவரது தலைகாணியால் முகத்தை அமுக்கி, என் துப்பட்டாவால் கழுத்தையும் இறுக்கி கொலை செய்தோம்.

கள்ளக்காதலன்
இதுக்கப்புறம், நான் எதுவுமே தெரியாதது போல் மீன் வாங்க வானகரம் மீன் மார்கெட் சென்றதாக நாடகமாடினேன்" என்றார். இதையடுத்து, காயத்திரியையும்,பானுவையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் முக்கியமான நபரான கள்ளக்காதலன் எஸ்கேப் ஆகியிருந்தார். அவரை 2 தினங்களாக போலீசார் தேடி வந்தனர்.

ஐடியா
கடைசியில் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், "எனக்கும் காயத்ரிக்கும் உறவு இருந்தது.. என்னை தீர்த்து கட்டுவேன் என்று காயத்ரியிடம் நாகராஜ் சொல்லவும் நாங்கள் பயந்துவிட்டோம். அதனால என் மனைவி பானுதான், நாகராஜை தீர்த்துக்கட்ட காயத்ரியிடம் ஐடியா தந்தார்" என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மகேந்திரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications