குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க போன வித்யா.. கொரட்டூர் சிக்னலில் காத்திருந்த எமன்.. சென்னையில் சோகம்
சென்னை: சென்னை கொரட்டூரில் சாலையில் சிக்னலுக்காக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த இளம் பெண் மீது தாறுமாறாக பின்னால் வந்த மாநகர அரசு பஸ் மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் பஸ் டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்த போலீசிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கொளத்தூர் அடுத்த பூம்புகார் நகர் 5-வது தெருவை சேர்ந்த 43 வயதாகும் மகேந்திரன் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா. 35 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களது குழந்தைகள் மாதவரம் ரவுண்டானா அருகே பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை காலை 11.30 மணி அளவில் மகேந்திரன் வேலைக்கு சென்ற போது, மனைவி வித்யாவையும் உடன் அழைத்து சென்றார்.

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மகேந்திரன் இறங்கி கொண்டார். தனது பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மாதவரம் ரவுண்டனா நோக்கி வித்யா சென்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே கொரட்டூர் வடக்கு சிக்னல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த வித்யா மீது பின்னால் அதிவேகமாக வந்த மாநகர பஸ் நிலைதடுமாறி வித்யா வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி வித்யா சம்பவ இடத்திலேயே தலை காயம் ஏற்பட்டு விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து வித்யாவை தூக்கிய போது இறந்து கிடந்தார். இதையடுத்த ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அப்படியே நேராக மாநகர பேருந்து ஓட்டுர் ரமேஷை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான தகவல் அறிந்த விரைந்து சென்ற செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பஸ் டிரைவர் ரமேஷை பொது மக்களிடமிருந்து மீட்டனர்.
மேலும் பலியான வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். சாலையில் சிக்னலுக்காக காத்திருந்த போது மாநகர பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் கொரட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications