கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி.. ITR தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது! கண்காணிக்கும் புது கண்
சென்னை: வருமான வரித்துறை இந்த வருடம் அதிநவீன ஏஐ மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை சோதனை செய்ய உள்ளது. கடந்த வருடமே ரிட்டர்ன் தாக்கலை சோதனை செய்ய ஏஐ பயன்படுத்தப்பட்டது. இந்த முறை அதில் அதிநவீன மாடல் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

வருமான வரி ரிட்டர்ன்
ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கி உள்ளது. ஆனால் ஏப்ரல் தொடங்கி 1 வாரம் ஆகியும் கூட.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் தளத்தில் இந்த நிதி ஆண்டிற்கான அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.
இதில் இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எப்போது திறக்கும்
2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும். பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும்.
ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும். ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.
நவீன மாடல்
வருமான வரித்துறை இந்த வருடம் அதிநவீன ஏஐ மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை சோதனை செய்ய உள்ளது. கடந்த வருடமே ரிட்டர்ன் தாக்கலை சோதனை செய்ய ஏஐ பயன்படுத்தப்பட்டது. இந்த முறை அதில் அதிநவீன மாடல் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. இதனால் இந்த முறை முறைகேடுகள் எளிமையாக தடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications