அன்பு பரிசு கேட்ட காதலி.. சென்னையில் பட்டப்பகலில் காதலன் பார்த்த வேலை.. கடைசியில் கம்பி எண்ணும் ஜோடி
சென்னை: சென்னையில் காதலர் தினத்திற்கு பரிசு கேட்ட காதலிக்காக சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம், பைக்கில் சென்ற இளம்பெண் ஒருவர் செல்போன் பறித்துள்ளார். இத்தனைக்கும் இந்த செல்போன் பறிப்பின் போது காதல் ஜோடி ஒன்றாக பைக்கில் சென்றுள்ளனர். சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரங்களை இங்கே காண்போம்.
காதலி ஆசைப்பட்டு கேட்டால் தட்டாமல் பரிசுப் பொருளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என்று இளைஞர்கள் கிஃப்ட் கொடுப்பதை பல சினிமாக்களிலும், ஏன் நிஜத்திலும் கூட பார்த்து இருக்கலாம். அப்படியான ஒரு சம்பவம்தான் சென்னையில் நடைபெற்றுள்ளது.

ஆனால், காதலி செல்போன் பரிசு பொருள் கேட்டதற்காக அதை வாங்கி கொடுக்க நினைக்காத காதலன், சாலையில் நடந்து சென்ற மற்றொரு பெண்ணிடம் பறித்து அதை கிஃப்டாக கொடுத்து இருக்கிறார். சென்னையில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் குறித்த செய்தியை விரிவாக காண்போம்.
சென்னை மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலை பகுதியை சேர்ந்தவர் ஆஷா பேம் (வயது 24 ). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலைக்கு போவதற்காக சாலையில் தனியாக நடந்து சென்றார். செல்போன் பேசிக்கொண்டே சென்று கோண்டிருந்த ஆஷா பேகமின் அருகே பைக் வரும் சத்தம் கேட்டது.
சாலையின் ஓரத்தில் செல்போனில் பேசியபடியே ஆஷா பேகம் சென்று கொண்டிருந்ததால், அந்த வழியாக வந்த காதல் ஜோடி ஒன்று இவரது செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் பறித்து சென்றது. ஆஷா பேகம் ஆப்பிள் ஐபோன் வைத்து இருந்த நிலையில் அதை செல்போன் பறிப்பு ஜோடி பறித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் குமரன் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து செல்போன் பறித்து சென்ற ஜோடியை அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கைதான இருவரும் காதல் ஜோடி என தெரியவந்தது.
19-வயதான சூர்யா என்ற இளைஞரும் 20 வயதான சுஜித்ரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்து இருக்கிறார்கள். காதலர் தினம் வருவதால் தனக்கு அன்பு பரிசு தருமாறு காதலி கேட்டு இருக்கிறார். இதனால் காதலிக்கு ஏதாவது விலையுர்ந்த கிஃப்ட் கொடுத்து அசத்த வேண்டும் என நினைத்துள்ளார் சூர்யா. ஆனால் இவர் தேர்வு செய்த பாதைதான் கடைசியில் கம்பி எண்ண வைத்துள்ளது.
காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆஷா பேமினின் செல்போனை பறித்து காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார் சூர்யா. இதில் இளைஞர் சூர்யா மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறு வயதில் இருந்தே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். காதலிக்கு பரிசு அளிக்க செல்போன் பறித்த காதலனுடன் சேர்ந்து தற்போது காதலியும் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications