மெட்ரோ ரயிலில் கஞ்சா கசக்கிய இளைஞருக்கு கையில் மாவுக்கட்டு.. கழிவறையில் வழுக்கி விழுந்ததாக தகவல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய புவனேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில், அவர் கையில் மாவுக்கட்டுடன் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்படபோதை பொருள் நடமாட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் போதைப் பொருள் பயன்பாடு என்பது ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியிருந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான படத்தை தனது எக்ஸ் தளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிர்ந்து இருந்தார். "பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?" என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நடுவழியில் பயணியை இறக்கிவிட்ட ஆம்னி பஸ்.. மறக்க முடியாத உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்
புவனேஷ், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி அன்று தண்டையார்ப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேலைக்கு செல்லும்போது கஞ்சா பொட்டலத்தை பயன்படுத்த வெளியே எடுத்த போது சக பயணி ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
கைதான புவனேஷ் மீது காசிமேடு காவல் நிலையத்தில் திருட்டு, கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக கைதான புவனேஷ் கையில் மாவுக்கட்டுடன் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. போலீசார் கைது செய்த நிலையில், கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு..10 வருடம் மேல் தலைமறைவு! சம்போ செந்திலை பிடிக்க புது ரூட்டை கையில் எடுத்த போலீஸ்
புவனேஷ்க்கு கஞ்சா கிடைத்தது எப்படி? யாரிடம் வாங்கினார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் புவனேஷ் கையில் மாவுக்கட்டுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications