ஹெல்மெட் போடாததுக்கு ரூ.1000.. எதிர்த்து பேசுனதுக்கு ரூ.2000 அபராதம்! டிராபிக் போலீசிடம் வாக்குவாதம்
சென்னை: "ஹெல்மெட் போடாததுக்கு ஃபைன் 1000 ரூபாய்.. எதிர்த்து பேசியதற்கு 2000 ரூபாய்".. என சென்னை போக்குவரத்து காவல்துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியதால், அந்த போக்குவரத்து பெண் போலீசிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மருத்துவமனை செல்வதற்காக ராமாபுரம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் ஓட்டிய நபர் மட்டும் ஹெல்மெட் அணிந்திருந்தார். பில்லியனில் அமர்ந்திருந்தவர் ஹெல்மட் அணியாமல் இருந்துள்ளார்.

ராமாபுரம் சிக்னல் அருகே சென்றபோது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியாததால் அவருக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது அவர்கள், நாங்கள் கோர்ட்டில் அபராதத்தை கட்டிக் கொள்கிறோம், இப்போது பணம் இல்லை எனக் கூறியுள்ளனர். இருப்பினும் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், இப்போதே ஃபைன் கட்ட வேண்டும், இல்லையென்றால் வண்டியை பறிமுதல் செய்வோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவ அவசரத்திற்காக செல்வதால் பணம் இல்லை, இப்போது கட்ட முடியாது, 15 நாட்களுக்குள் கோர்ட்டில் கட்டிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அபராதத்தை கட்டினால் தான் போக முடியும் எனக் கூறி, வண்டி சாவியையும் போனையும் வாங்கியுள்ளார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.
இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ எடுத்துள்ளார் அந்த இளைஞர். அதற்கு பெண் சப் இன்ஸ்பெக்டர், "நீ வீடியோ போடு.. நான் ஃபேமஸ் ஆகிக்கிறேன். எதிர்த்துப் பேசினா 2000 ரூபாய் அபராதம் கட்டணும். மொத்தமா 3000 ரூபாய் கட்டவேண்டும்" எனக் கூறியுள்ளார். பெண் சப் இன்ஸ்பெக்டர் - இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, தனக்கு ரூபாய் 3000 அபராதம் விதிக்கப்பட்ட சலானுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த இளைஞர், வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளிப்பேன் எனக் கூறியுள்ளார். ஹெல்மெட் போடாததற்கு அபராதம் கட்டுகிறேன், ஆனால், போலீசை எதிர்த்துப் பேசியதற்கு 2000 அபராதம் எனச் சொன்னால் எப்படி கட்டுவது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications