கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்.. . தமிழ்நாட்டுக்கும் ஆபத்தா? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டது.
Recommended Video
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் கொரோனா குறையவில்லை. அங்கு தினமும் சாராரியாக 12,000 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. வார இறுதி நாட்களில் கடுமையான ஊரடங்கு போட்ட போதிலும் தொற்று குறைந்தபாடில்லை.

ஜிகா வைரஸ்
இது போதாதென்று தற்போது முதல்முறையாக 'ஜிகா' வைரஸ் பாதிப்பும் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பாறசாலை என்ற இடத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜிகா வைரஸ் என்றால் என்ன?
இதனால் ஜிகா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜிகா வைரஸ் என்பது மழைக்காலங்களில் பரவும் ஒருவகை காய்ச்ச்சல் போன்றதுதான். இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள்தான். டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் ஜிகா வைரசையும் பரப்புகின்றன.

அறிகுறிகள் என்ன?
பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலமாகவே பரவும் என்பதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். சுடுநீர் குடிப்பது மிகவும் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சாதாரண காய்ச்சலுக்கு உள்ளதை போன்றே, தலைவலி, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

விழிப்புணர்வு வேண்டும்
கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. ஆனால் தமிழ்நாடு எல்லை பகுதியை ஒட்டி கேரளாவில் ஜிகா புகுந்து விட்டதால் தமிழ்நாடும் முன்எச்சரிகையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இப்போதே ஜிகா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications