Zoho பணி தான் என் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டம்.. புலம்பிய இளைஞர்.. என்ன நடந்தது?
சென்னை: ''என்னுடைய தொழில் வாழ்க்கையில் மிக மோசமான காலக்கட்டம் என்றால் அது ஜோஹோவில் பணியாற்றிய 3 ஆண்டுகள் தான். மனஅழுத்தம், பதற்றத்தில் இருந்தேன். கோடிங்கையே வெறுக்கும் அளவுக்கு நான் தள்ளப்பட்டதோடு, எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையையே இழந்துவிட்டேன்'' என்று சாப்ட்வேர் இன்ஜினியர் கருத்து கூறியிருப்பது வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கேவல் அகர்வால் என்பது தனது LinkedIn வலைதளங்களில் கூறியுள்ளதாவது: கேவல் அகர்வால் (Kewal Agarwal) எனும் அந்த நபர், ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் சேர்ந்த பிறகுதான் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெற்றதாகக் கூறுகிறார். Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்த ஆண்டு ஊழியர்களுக்கு வழக்கமான ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு, இந்த கருத்து வெளியாகியுள்ளது.
எனக்கு ஜோஹோவில் வேலை கிடைத்தது. முதல் வேலை என்பதால் மிகவும் ஹேப்பியானேன். ஆனால் அந்த மகிழ்ச்சி எதிர்பார்த்தபடி அமையவில்லை. நான் கடந்த 2015ம் ஆண்டு 'மெம்பர் ஆஃப் டெக்னிக்கல் ஸ்டாஃப்' பிரிவில் பணிக்கு சேர்ந்தேன். மொத்தம் 3 ஆண்டுகள் பணியாற்றினேன்.
என்னுடைய தொழில் வாழ்க்கையில் மிக மோசமான காலக்கட்டம் என்றால் அது இதுதான். மனஅழுத்தம், பதற்றத்தில் இருந்தேன். கோடிங்கையையே வெறுக்கும் அளவுக்கு நான் தள்ளப்பட்டேன். அதுமட்டுமின்றி புதிதாக பணியில் சேர்ந்த எனக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்தேன். வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையையே முற்றிலுமாக இழந்தேன். பிறகு சின்ன ஸ்டார்அப் நிறுவனத்திற்கு மாறினேன். அங்கு தான் நான் எனது தன்னம்பிக்கையை மீட்டெடுத்தேன்.
ஆனால் இந்த சம்பவத்துக்கு நான் ஜோஹோ நிறுவனத்தையோ அல்லது என்னையோ நான் குறை கூறவில்லை. ஏனென்றால் நான் அப்போது தான் பணிக்கு சேர்ந்து இருந்தேன். வேலையின் தொடக்க காலம் என்பதால் தொழில்முறை சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அனுபவம் இல்லை. இதனால் திணறினேன். ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது'' என கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டி உள்ளது. ஐடி துறையில் பணியாற்றும் பலரும் இந்த பதிவுக்கு கமெண்ட்டுகள் செய்து வருகின்றனர். கேவல் அகர்வாலின் பதிவை பார்த்தவர்கள், ''ஒரு நிறுவனம் எப்படி ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் என்பதற்கு உதாரணம் என்றும், ஜோஹோ புகழ்பெற்ற நிறுவனமாக இருந்தாலும் கூட அது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. அதேபோல் சிறிய நிறுவனம் கூட ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் வகையில் மனஉறுதியை வழங்கும்'' என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவை செய்துள்ள கேவல் அகர்வால் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் ஜோஹோவில் பணிக்கு சேர்ந்தார். 2018 ம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் 'Zoho Books' எனும் சாப்ட்வேர் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கான எடிசன்களும் அடங்கும். இதுதவிர பேங்கிங் இன்டிகிரேஷன்ஸ், REST API மேம்பாட்டுப் பணிகளிலும் அவர் ஈடுபட்டு இருந்தார்.
பிறகு 2020 செப்டம்பர் மாதம் மிஷிபே எனும் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு புராடக்ட் மேனேஜ்மென்ட் துறைக்கு மாறினார். கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அதன்பிறகு பிளிப்கார்ட் நிறுவனத்தில் நுழைந்தார். பிறகு அங்கிருந்து கிளியர்ட்ரிப் நிறுவனத்துக்கு மாறியவர் தற்போது சீனியர் புராடக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
