ஒரே டேக்தான்.. சர்ரென சரிந்த சொமெட்டோவின் பங்குகள்.. தமிழர்களின் டிரெண்டால் எவ்வளவு இழப்பு தெரியுமா?
சென்னை: சொமெட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இந்தி குறித்து பேசிய கருத்து சர்ச்சையானதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரமாரியாக சரிந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஸ் என்ற நபரிடம் சொமெட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் ஊழியர் பேசிய விதம்தான் இந்த சர்ச்சைக்கு காரணம். விகாஸ் தான் ஆர்டர் செய்த உணவு முழுவதுமாக வரவில்லை என்று சொமெட்டோ கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார்.
அவரிடம் பேசிய கஸ்டமர் கேர் ஊழியர் திமிராக பதில் அளித்துள்ளார். உணவிற்கான ரீ பண்ட் வழங்க முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தி
அதோடு நீங்கள் ஆங்கிலம் பேசுவதால் உங்களிடம் சரியாக பேச முடியவில்லை என்று அந்த சொமேட்டோ அதிகாரி தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷிடம் கூறி இருக்கிறார். இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று அந்த சொமேட்டோ அதிகாரி திமிராக பதில் அளித்துள்ளார். இதை ட்வீட்டரில் பகிர்ந்து ஆகாஷ் சொமேட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

டிரெண்ட்
இதையடுத்து இதனால் #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. சொமேட்டோ நிறுவன ஊழியர் எப்படி இந்தியை திணிக்கலாம். எங்களை இந்தி கற்றுக்கொள்ள சொல்ல நீங்கள் யார் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி சொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக டிரெண்ட் செய்து வருகிறார்கள். எங்கள் மாநிலத்தில் உள்ள நீங்கள் எங்கள் மாநில மொழியில் சேவை வழங்குங்கள் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்து வருகிறார்கள்.

அன்இன்ஸ்டால்
இந்த நிலையில்தான் #Reject_Zomato டேக் காரணமாக இன்று பலரும் தங்கள் போனில் சொமெட்டோ செயலியை அன்இன்ஸ்டால் செய்ய தொடங்கினார்கள். தமிழர்கள் மட்டுமின்றி இந்தியை தாய் மொழியாக கொள்ளாத நபர்கள் பலர் நாங்கள் இந்த செயலியை இனி பயன்படுத்த மாட்டோம் என்று கூறி அதை அன் இன்ஸ்டால் செய்தனர். அதோடு சொமெட்டோவிற்கு எதிரான #Reject_Zomato டேக் ட்விட்டரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்களுடன் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

நெகட்டிவ் டிரெண்டிங்
இந்த நெகட்டிவ் டிரெண்டிங் காரணமாக சொமெட்டோவிற்கு எதிராக பங்கு சந்தையிலும் டிரெண்ட் உருவானது. பங்கு சந்தையிலும் சொமெட்டோ நிறுவனம் இதனால் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. இன்று காலையில் 144.80 ரூபாய்க்கு இதன் சொமெட்டோவின் ஒரு பங்கு சந்தை மதிப்பு இருந்தது. பங்கு சந்தை தொடங்கிய போது இந்த மதிப்பில் இருந்த சொமெட்டோ சர்ரென வேகமாக சரிந்தது.

சரிவு
இணையத்தில் நெகட்டிவ் டிரெண்ட் ஆக ஆக சொமெட்டோவின் பங்குகள் ஒவ்வொரு ரூபாயாக சரிந்தது. இதனால் மிக மோசமான நிலையை அடைந்த சொமெட்டோ பங்குகள் 138.45 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற நிலையை அடைந்தது. 144.80 ரூபாய் என்ற மதிப்பில் இருந்து வேகமாக இழப்பை சந்தித்து 138.45 ரூபாய் என்ற அளவிற்கு ஒரு பங்கு மதிப்பு குறைந்தது.

பெரிய இழப்பு
அதன்பின் பெரிய அளவில் ஏற்றம் காணாமல் கொஞ்சம் ஏற்றம், பின் பெரிய இரக்கம் என்று சரிந்து கொண்டே இருந்தது. இதனால் அந்த நிறுவனத்தில் இருந்து பலர் பங்குகளை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
அதன்பின்தான் சொமேட்டோ நிறுவனம் தனது ஊழியரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டது. அதில், வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம்.

மன்னிப்பு
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

நீக்கம்
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை . ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்).

நடவடிக்கை
மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மீண்டும் ஏற்றம்
சொமேட்டோ இந்த மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் உயர தொடங்கியது. இந்த விளக்கத்தை தமிழர்கள் பலர் வரவேற்று இருந்தனர். அந்த ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் பலர் வரவேற்று இருந்தனர். மன்னிப்பிற்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குகள் தற்போது 143.20 ரூபாய் என்ற அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications