கேரளாவில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி.. மெட்ரோ வாட்டர் தெரியும்.. இது என்ன?
கொச்சி: தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து திறந்து வைத்தார்.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் முக்கியமானது என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகமும் விமான நிலையமும் இருக்கிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து வாட்டர் மெட்ரோ திட்ட படகு சோதனை ஓட்டம் நடக்கிறது.
கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரு 747 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.
இந்த படகில் குறைந்த கட்டணம் ரூ 20, அதிக கட்டணம் ரூ 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல் இந்த கப்பலில் கழிப்பிடம், குளிர்சாதன வசதி, உணவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. உயர்நீதிமன்ற சந்திப்பு மற்றும் வைபின் இடையே வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்குகிறது.
இந்த திட்டம் நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து காற்று மாசையும் குறைக்கிறது. இந்த படகில் பயணம் செய்ய வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும் மாதாந்திர பாஸுக்கு ரூ 600 கட்டணமும் 3 மாதங்களுக்கு ரூ 1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் பாதுகாப்பு அம்சமான சிசிடிவி கேமராவும் அதை செயல்படுத்த கட்டுப்பாட்டு மையமும் இருக்கிறது. உடல் ஊனமற்ற, வயதான பயணிகளின் வசதிக்காக மிதக்கும் படகு நிறுத்தங்கள் உள்ளன. சேஃப்டி ஜாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. Kochi One செயலி மூலம் டிஜிட்டல் வழியாக படகில் பயணம் செய்ய கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் கேரளாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை வேளையில் சாலை பிரச்சாரத்திலும் அவர் கலந்து கொண்டார், பின்னர் பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். இன்றைய தினம் வாட்டர் மெட்ரோ திட்டம், வந்தே பாரத் ரயில், உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த அவருக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications