திமுகவுல சேரப்போறீங்களா? - போன் போட்ட நிர்வாகிகள்.. பரவிய தகவலால் பதறிப்போன வேலுமணி ஆதரவாளர்!
கோவை : முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில், தான் திமுகவில் இணையப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என பதறிப்போய் மறுத்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி.
பொள்ளாச்சி அருகே நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ தினகரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, தி.மு.கவில் இணையப்போவதாகவும் தகவல்கள் பரவின.
இந்தத் தகவலை உறுதியாக மறுத்துள்ளார் அமுல் கந்தசாமி. வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவருமான அமுல் கந்தசாமி, கடைசி வரை அதிமுக தான் எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த ஆறுகுட்டி
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுகுட்டி, ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் தலைமை தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி நடவடிக்கையில் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். இந்நிலையில், ஆறுகுட்டி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பொள்ளாச்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார் ஆறுகுட்டி.

அதிமுக எம்.எல்.ஏ
மேலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும் மேயருமான செ.மா.வேலுச்சாமி, வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி ஆகியோரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணையப்போவதாக ஒரு தகவல் பரபரத்தது. இது கோவை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதறிப்போன அமுல் கந்தசாமி
இந்தத் தகவல் வேகமாக பரவியதையடுத்து, அதிமுகவினரே அமுல் கந்தசாமிக்கு போன் போட்டு விசாரிக்க, அவர் பதறிப் போயுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்ததையொட்டி, வரவேற்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நான் திமுகவில் இணைவதாக கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளார் அமுல் கந்தசாமி.

மறுப்பு
உடனடியாக ஒரு மறுப்பு அறிவிப்பையும் வெளியிட்டார் அமுல் கந்தசாமி. அமுல் கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில், "திமுகவினர் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்துள்ளனர். இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வது திமுகவின் வாடிக்கை. எனக்கு அதிமுகவில் இருக்கக்கூடிய பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் வதந்தி பரப்புகிறார்கள். எஸ்.பி.வேலுமணிக்கு உறுதுணையாக கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

இறுதிவரை அதிமுக
நான் அன்னூரில் குடியிருக்கிறேன். 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் நான் தலைவணங்க மாட்டேன். இறக்கும்வரை அதிமுகவில்தான் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications