கோவை: பாஜக அண்ணாமலை வேட்பு மனு ஏற்பால் பெரும் சிக்கல்-தேர்தல் ஆணையத்தில் அதிமுக, நாம் தமிழர் புகார்!
கோவை: கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அண்ணா திமுக மனு கொடுத்துள்ளது. அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்திலும் அண்ணா திமுக வழக்கு தொடர உள்ளது.
கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் பரிசீலனையின் போதே அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்புக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

தற்போது அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது; அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் மனு கொடுத்துள்ளது. அதில், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாளில்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்; ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நீதிமன்ற முத்திரைத் தாளைப் பயன்படுத்தி அண்ணாமலை வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அப்பட்டமான விதிமீறல். இதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கவே கூடாது. இதற்கு தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில், அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்புக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications