Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுளான ட்ரைவர்! வெறும் 68 நிமிஷம் தான்! கோத்தகிரி டூ கோவை! பச்சிளம் குழந்தையுடன் பறந்த ஆம்புலன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

கோவை : ஒரு உயிரைக் காக்கும் மருத்துவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அவர்களைப் போலவே போற்றப்பட வேண்டிய , மதிக்கப்பட வேண்டியர்வர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள். பரிதவிக்கும் உயிரைக் காக்க தங்கள் உயிரை துச்சமென மதித்து வாகனம் இயக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களால் காப்பற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்திருக்கிறது.

கோத்தகிரியில் இருந்து கோவைக்கு 68 நிமிடத்தில் பயணம் செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்து பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை மேல் சிகிச்சைக்காக புயல் வேகத்தில் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோத்தகிரி தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாந்தநாடு பகுதியை சேர்ந்த டெண்யா - பவித்ரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தை

உடனே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் கோத்தகிரியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விவரங்கள் கூறி விரைவாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநர் அக்கீம் மற்றும் செவிலியர்,உதவியாளர்களுடன் குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கோவை புறப்பட்டு சென்றனர்.

கடவுளான ஓட்டுனர்கள்

கடவுளான ஓட்டுனர்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரில் ஏற்ப்படாதவாறு தங்களது ஆம்புலன்ஸ் வாட்ஸ் அப் குழுக்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைக்கு உடனே தீவிர அளிக்கப்பட வேண்டும். எனவே சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம்,காரமடை,கோவில் பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதி வழியாக ஆம்புலன்ஸ் பயணம் நடைபெறும் எனவே எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

வெறும் 68 நிமிடம்

வெறும் 68 நிமிடம்

இதனடிப்படையில் ஆம்புலன்ஸ் கோத்தகிரியில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னும் பின்னும் 6 ஆம்புலன்ஸ்களும் குழந்தையை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் எச்சரிக்கை ஒலி எழுப்பிய நிலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி கோவையை நோக்கி சென்றனர். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்கீம் தன் உயிரையும் துச்சமென நினைத்து கோத்தகிரியில் இருந்து கோவைக்கு 68 நிமிடத்தில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தார்.

கண்ணீர் மல்க நன்றி

கண்ணீர் மல்க நன்றி

தற்போது பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இருந்து கோவைக்கு இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் நிலையில் 68 நிமிடத்தில் ஆம்புலன்ஸை இயக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் டெண்யா,பவித்ரன் தம்பதி ஆனந்த கண்ணீருடன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+