ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டும் நிலையில் தவெக தான் களத்தில் மிகவும் மந்தமாக உள்ளது. ஜனநாயகன் படம் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, "கஞ்சா பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள்

இந்த அடிப்படை பிரச்சனைகளில் திமுக கோட்டை விட்டுள்ளது. திமுக பைல்ஸ் ஊழல் தொடர்பாக நான் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளேன், அவர்கள் பாஜக அலுவலகத்திற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளார்கள். அமைச்சர் காந்தி வேட்டி சேலையில் ரூ.160 கோடி ஊழல் செய்தது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளேன். அதுகுறித்தும் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கமலாலயம் வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்கள்.
ஜனநாயகன் லீக் பிரச்சனை
ஆனால் இரண்டு புகார்களிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்படும். புழல் சிறையில் தனி பிளாக் கட்டி இவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய்யின் ஜனநாயகம் திரைப்படம் சமூகவலைதளங்களில் லீக்கானது எங்களுக்கும் வருத்தமளிக்கிறது அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஜனநாயகன் படம் திரையரங்கில் வெளியாகும்போது ஒரு ரசிகனாக நான் திரையரங்கும் சென்று பார்ப்பேன். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனைத் தொடர்புப்படுத்தி பேசுவது வன்மத்தின் உச்சம். ஜனநாயகன் திரைப்படம் உருவாக்கத்தில் பல பேரின் உழைப்பு, ரத்தம் கலந்துள்ளது. அதை எந்த விஷக்கிருமிகள் வெளியிட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுக மீது விமர்சனம்
இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதை நாங்களும் ஆதரிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக வேண்டாம் தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டுமென்று மக்கள் தெளிவாக உள்ளார்கள். நாங்கள் இப்போதும் அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி கொண்டு தான் இருக்கிறோம்.
2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பித்து விடுவார். ஸ்டாலின் ஒரு பக்கம் சென்று விடுவார். திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது. செந்தில் பாலாஜி வாய்ப்பை பயன்படுத்தி கனிமொழி அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார். அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலும் வெளியில் வந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், திமுக இனி ஜென்மத்திற்கு ஆட்சிக்கு வராது
செந்தில் பாலாஜி போல நானும் தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை. செந்தில் பாலாஜி டாஸ்மாக்கில் பத்து ரூபாய் சம்பாதித்து அதனை வாரி இறைத்து கொண்டிருக்கிறார். கோவை தெற்கு தொகுதியில் சரித்திரம் காணாத ஒரு தோல்வியை செந்தில் பாலாஜி பார்க்கப் போகிறார்" என்று கூறினார்.
-
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்











Click it and Unblock the Notifications