மநீமவில் இருந்து விலகிய அனுஷா ரவி.. அடுத்த ஒரு மணி நேரத்தில் எடுத்த அதிரடி முடிவு
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரும், மாநில தலைமை நிலைய பரப்புரையாளராகவும் கடந்த 2021ம் ஆண்டு முதல் இருந்து வந்த அனுஷா ரவி, அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ல் தொடங்கப்பட்ட நிலையில் வெறும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் 5 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற கமலின் மக்கள் நீதிமய்யம், 3.71 விழுக்காடு வாக்குகளையும் பெற்று மக்களிடையே கவனம் பெற்றது.

இதனால் 2021 சட்டசபை தேர்தலில் அதிகமான வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலில், 2.45 விழுக்காடு வாக்குகளே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது.
தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2021 சட்டசபை தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் இடம் பெற்ற இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.. கமலும் கோவை தெற்கு தொகுதியில் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தார்..
2019-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை விட 1.26 விழுக்காடு குறைவான வாக்குகளே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 பேர் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்த நிலையில் . ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 847 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். இதனால் அப்போது மகேந்திரன் உள்பட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளார். ஆனால் ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை.. அதற்கு பதிலாக 2025ல் கமலுக்கு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து கமல்ஹாசன், திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில கமல்ஹாசன் இந்த முறை தேர்தலில் ஈடுபடாததால் அதிருப்தி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரும், மாநில தலைமை நிலைய பரப்புரையாளரான அனுஷா ரவி, அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.
இருப்பினும், தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்த ஒரு மணிநேரத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அனுஷா ரவி பாஜகவில் இணைந்துள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications