என்ன *** சனாதனம்? ஆ.ராசாவுக்கு பகிரங்க மிரட்டல்! உத்தம ராமசாமிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம்!
கோவை : இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான இந்துக்கள் குறித்து மிகவும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுதுள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கடையடைப்பு, உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆ.ராசா
இந்நிலையில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,"திமுக எம்பி ஆர் ராசாவுக்கு தைரியம் இருந்தால் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன் என மிகவும் ஆவேசமாக பேசினார். மேலும் ஆ. ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக வீடியோ வெளியானது.

அதிரடி கைது
இந்நிலையில் உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து தபெதிகவினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து புகாரை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பிறகு உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து திமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

கோவையில் பரபரப்பு
இந்த கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு திமுக எம்பி ஆ.ராசாவின் உருவ பொம்மையையும் தீ வைத்து கொளுத்தினர். பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த திமுக சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட நிலையில் 400 பேரை கைது செய்தனர் காவல்துறையினர். மேலும் 11 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதோடு சாதிய நோக்கோடு திட்டியதாக பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பாஜகவினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தம ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications