1 கோடி கேட்கும் கோவை நட்சத்திர ஓட்டல் சமையல் கலைஞர்.. பிசியோதெரபியால் தலைகீழான வாழ்க்கை?
கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்த சமையல் கலைஞர் லோகநாதன் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு பிசியோதெரபி சிகிச்சையின்போது எலும்பு முறிவு ஏற்பட்டு செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் சமையல் கலைஞர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கு ஆம்புலன்ஸில் வந்து மனுதாக்கல் செய்தார்.
கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தைச் சேர்ந்த 40 வயதாகும் லோகநாதன் என்பவர் சமையல் கலைஞர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற லோகநாதன் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவர் முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்படாமல் போனது.

இதையடுத்து சிகிச்சைக்குப் பின் கோவையில் வசித்து வருகிறார். சக்கர நாற்காலி மூலம் மட்டுமே அமர்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் லோகநாதனை தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்களாம்.
பின்னர் அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் அவருக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டதாம். இந்த நிலையில் நேற்று கோவை நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் படுத்த படுக்கையாக வந்தார். அவருடன் தாய் கவுரியும் வந்தார். பின்னர் கோவை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில் சமையல் கலைஞர் லோகநாதன் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தேன். அங்கு விபத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் வந்து வசித்து வருகிறேன். கோவை சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியர் மையத்தில் எனக்குப் பயிற்சி மாணவர்கள் மூலம் பிசியோதெரபி சிகிச்சை தந்தார்கள்.
அப்போது நான் மறுத்தபோதும், வலுக்கட்டாயமாக சிகிச்சை அளித்தனர். இதில் எனக்கு தொடைப் பகுதியில் இருந்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் முழுமையாக படுக்கையை விட்டு எழ முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மையத்தினர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. ஏற்கனவே விபத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த நான், எலும்பு முறிவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே சம்பந்தப்பட்ட மையத்தினர் எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், தவறான சிகிச்சையால் நிரந்தரமாக செயல்பட முடியாத சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார். இதனிடையே இந்த வழக்கின் போது, லோகநாதனின் நிலையைப் பார்க்க வேண்டும் என்று நீதிபதி கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் வந்த அவரை, கோர்ட் அதிகாரிகள் பார்வையிட்டு, அவர் தாக்கல் செய்த மனுவை ஆம்புலன்ஸில் இருந்தபடி, கைரேகை பெற்று வாங்கிச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications