ஏர்போர்ட் முதல் பையோமைனிங் வரை.. கோவைக்கு அள்ளித் தந்த முதல்வர்.. என்னென்ன திட்டங்கள் தெரியுமா?
கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த திட்டங்கள் பல இதன் மூலம் தொடங்கப்பட்டுள்ளதாகல் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன? அதன் மூலம் பயனடைபவர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
இன்று காலை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 1,07,062 பயனாளிகளுக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். கோவை மாவட்ட வரலாற்றிலேயே இத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதன் முறைய என சொல்லப்படுகிறது.
தற்போது இம்மாவட்டத்தில் ரூ.93.66 கோடி மதிப்பீட்டில் 98.42 கி.மீ நீளத்திற்கு 335 சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.60.01 கோடி மதிப்பீட்டில் 62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பையோமைனிங் திட்டப் பணிகள், ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் 11.49 கிமீ நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகள், ரூ.16.41 கோடி மதிப்பீட்டில் 63 எண்ணிக்கையிலான நகர் நல மையங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான மருத்துவ ஆய்வுக் கூடங்கள் கட்டும் பணிகள் என நடைபெற்று வருகின்றன.
மட்டுமல்லாது, ரூ.20 கோடியில் கோவை நகராட்சி பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ரூ.16 கோடி மதிப்பில் 63 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 3 மருத்து ஆய்வுக்கூடங்கள் கட்டும் பணிகள், ரூ.11 கோடியில் கோவை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய திட்டமாக பார்க்கப்படுவது கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்தான்.
உலகளவிலான தொழில் நகரமாக கோவை வளர்ச்சி பெறும் வகையில் கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு ரூ.1,810 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் ஒருபுறம் எனில், நிறைவுபெற்ற பணிகளும் அதேபோல நீண்டுள்ளது. அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா ஹால் ரூ.91 லட்சம் செலவில் நவீன முறையில் மாநகராட்சி மன்றத்திற்கான கலந்தாய்வுக் கூட்ட அறை சீரமைக்கும் பணிகள் நிறைவுற்றுள்ளன.
மேலும், ரூ.50 லட்சம் செலவில், கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் கட்டும் பணிகள், மாவட்டத்தில் 275.57 கிமீ தொலைவு நீளத்திற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் போன்றவை தற்போது முடிவடைந்துள்ளதாக அரசு சார்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டங்களும், ஏற்கெனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களும்தான் கோவையை நவீனமாக மாற்ற இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications