• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மண் பானை குக்கர் முதல் குழி பணியார சட்டி வரை.. அனைத்திலும் புதுமை.. நவீனயுகத்தில் மண் பாண்டத் தொழில்

|

கோவை: தண்ணீர் முதல் சமைக்கும் உணவுகள் வரை தனிச்சுவையையும் நல்ல மணத்தையும் கொடுக்கும் மண் பாண்ட பொருட்கள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகின்றன. நவீனமயத்துடன் மண் பாண்ட பொருட்கள் தயார் செய்யப்படுகிறது.

  மண் பானை குக்கர் முதல் குழி பணியார சட்டி வரை.. அனைத்திலும் புதுமை.. நவீனயுகத்தில் மண் பாண்டத் தொழில்

  உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது.

  ஆதிக் காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரீகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  பாதி ஊரு கொரோனால காலி ஆகிடுச்சு.. இப்போ இதைக் கேட்டா மீதியும் காலி ஆகிடுமேய்யா!

   மதிப்பு குறைந்த பொருட்கள்

  மதிப்பு குறைந்த பொருட்கள்

  மண் பாண்டங்கள் என்பவை விலை மலிவானதாகவும், மதிப்புக் குறைந்தப் பொருட்கள் என்றும் பெரும்பாலும் நினைக்கின்றனர்.

  நவீன தொழிற்சாலைகள் அதிகரித்ததன் காரணமாக பலவித உலோக பாத்திரங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி வந்துள்ளன. செம்பு, பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் என பாத்திரங்கள் மாறி மாறி வந்துள்ளன.

   மண் பாண்டங்கள்

  மண் பாண்டங்கள்

  ஆனாலும், இன்றளவும் இப்பாத்திரங்களுடன் போட்டி போட்டு கொண்டு மண் பாண்டங்களும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. மண் பாண்டங்கள் எனும்போது அதில் வைக்கப்படும் தண்ணீர் முதல் சமைக்கும் உணவுகள் வரை அனைத்தும் தனிச் சுவையையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன.

   மண் பாத்திரங்கள்

  மண் பாத்திரங்கள்

  எனவே, மண் பாண்டங்கள் தற்போது மீண்டும் நாகரீக வடிவங்களில் இல்லங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பாண்டத்தின் பெருமை அறிந்த மக்கள் அன்றாட சமையல்களுக்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப தற்போது அழகிய நவீன தோற்றத்துடன் மண் பாத்திரங்கள் உலா வருகின்றன.

  வாணலி

  வாணலி

  மண் வாசம் வீசும் மண் பாத்திரங்கள் : மண் பாண்டங்கள் எனும்போது சமையலுக்கு உகந்த பானை, வாணலி, தட்டுகள், தேநீர் கோப்பைகள், உணவு பொருள்கள் சேமிக்கும் ஜாடிகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தும் புதிய பளபளப்புடன் அழகிய வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி புதிய கைப்பிடி வசதி கொண்ட வாணலிகள், குக்கர், பிரை பேன் என நவீன பாத்திரங்களாகவும் மண் பாண்டங்கள் தயார் ஆகின்றன. இவையனைத்தும் தரமான களிமண் கொண்டே உருவாகின்றன.

   நான் ஸ்டிக் கைப்பிடி

  நான் ஸ்டிக் கைப்பிடி

  நவீன வசதிகளுடன் கூடிய மண் பாண்டங்கள் : நான்ஸ்டிக் பாத்திரங்களின் கைப்பிடி போன்று இரு பக்க கைப்பிடி, மேற்புறம் கண்ணாடி தட்டு என தனி சிறப்பு மண்பாண்டங்கள் வந்துள்ளன.

  அதுபோல் பிரை பேன் போன்று நீண்ட கைப்பிடி உடன் கூடிய பாத்திரமும், விசில் ஊதும் குக்கர் அமைப்பில் மண் குக்கர், கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜெக், தேயிலை கப்கள், டீ செட், குழி பணியார சட்டி என அனைத்து வகை மண் பாண்டங்களும் நவீன இல்லங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. மண் பாண்டங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

   சிறப்பு அம்சங்கள்

  சிறப்பு அம்சங்கள்

  மண் பாண்ட பராமரிப்பும், சிறப்பு அம்சங்களும்: அனைத்து விலையுயர்ந்த பாத்திரங்களை எப்படி பாதுகாப்புடன் வைத்துள்ளோம். அதுபோல்தான் மண் பாண்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அதனை தூய்மை செய்வது சுலபம். புதிய மண் பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் ஏழு நாட்கள் தண்ணீரில் ஊற வைத்த பிறகு பயன்படுத்த வேண்டும். கேஸ் அடுப்புகளிலேயே மிதமான வெப்பத்தில் மண் பாண்டங்களை சமைக்க பயன்படுத்தலாம். மண் பாத்திரத்தின் ஆயுட்காலம் நாம் பயன்படுத்தும் வகையிலேயே அமைகிறது.

   தரக்குறைவாக பார்க்க கூடாது

  தரக்குறைவாக பார்க்க கூடாது

  மண் பாத்திர சமையல் உணவில் உள்ள அமில தன்மையை போக்குகிறது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட மண் பாத்திரங்களை நாம் தரக்குறைவாக பார்க்கக் கூடாது. அதில் காணப்படும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, மண் பாண்ட தொழில் நலிவடையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரில் மண் பாண்டம் செய்யும் தொழிலாளர் அளித்த பேட்டியில், நாங்கள் எங்தள் தாத்தா காலத்திலிருந்து இந்த தொழிலை செய்து வருகிறோம்.

   கூலி கொடுக்க முடியவில்லை

  கூலி கொடுக்க முடியவில்லை

  100 குடும்பத்திற்கு மேலானோர் இந்த மண் பாண்ட தொழிலை செய்து வந்தார்கள். தற்போது ஆட்கள் குறைந்துவிட்டார்கள். அதற்கு காரணம் ஒன்று மணல் சரியாக கிடைக்கவில்லை. கண்மாயிலிருந்து மணல் எடுத்து வர பணம் அதிக செலவாகிறது. இன்னொன்று இந்த மண் பாண்டம் செய்வது மிகவும் சிரமமானதாகும். மழை காலத்தில் இந்த தொழிலை செய்ய முடியாது. 6 மாதத்தில் இந்த தொழிலை நன்றாக செய்யலாம். இந்த கொரோனாவால் தொழில் தற்போது நலிவடைந்துள்ளது. வேலை செய்யும் ஆட்களுக்கு கூலியும் கொடுக்க முடியவில்லை.

   கொரோனா

  கொரோனா

  கோடை காலம் கொரோனாவால் போய்விட்டது. அடுத்தது விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதில் எப்படி வியாபாரம் செய்வது என்று கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மண் பாண்ட தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் அளவிற்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். இந்த தொழில் அழியாமல் இருக்க எங்களான ஆதரவை கொடுக்கிறோம். அது போல் அரசும் உதவ வேண்டும் என்றார்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Clay made utensils are manufacturing for smart use. Cooker to Kuzhi Paniyaram Kadai are in clay made.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more