Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை சம்பவம்..மரணத்திற்கு தயார்..மனைவி குழந்தைகளுடன் ஊர் சுற்றிய முபின்..அந்த நாள் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கோவை: கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக முபின் தனது மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக ஊர் சுற்றியுள்ளார். எப்போதுமே அமைதியாக இருக்கும் முபின் வழக்கத்திற்கு மாறாக குடும்பத்தினர் எல்லோரிடமும் கலகலப்பாக பேசியதாகவும் என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் பகுதியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி குழந்தைகளுக்குக் கூட தெரியாமல் வீட்டில் இருந்த பெட்டிகளில் வெடி பொருட்களை சேகரித்து வைத்திருந்தது முபினின் மனைவியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கு முன் நடந்தது என்

மரணத்திற்கு முன் நடந்தது என்

ஜமேசா முபின் மாற்றுத்திறனாளியான நஸ்ரத் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு தனது பெற்றோர்கள், உறவினர்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம். தனது மனைவியிடம் கூட எதையுமே வெளிப்படையாக பேச மாட்டாராம் முபின்.

டிரம் வாங்கிய முபின்

டிரம் வாங்கிய முபின்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினின் மனைவியிடம் என்ஐஏ காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முபினின் நடவடிக்கைகள் குறித்து தெரியவந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 20

அக்டோபர் 20

அக்டோபர் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது 20ஆம் தேதியே முபினின் மனைவி நஸ்ரத் தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டாராம். இதனையடுத்து முபின் மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அக்டோபர் 21

அக்டோபர் 21

அக்டோபர் 21ஆம் தேதி தனது மாமனார் வீட்டிற்கு சென்ற முபின் எல்லோரிடமும் சகஜமாக சிரித்து பேசி அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார். மனைவி குழந்தைகளை வெளியில் அழைத்துச்சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து மனைவி குழந்தைகளை மீண்டும் மாமனார் வீட்டில் விட்டு விட்டு கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வீட்டிற்கு வந்து விட்டாராம்.

அக்டோபர் 22

அக்டோபர் 22

கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் 22ஆம் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியும் அதற்கு முபின் பதில் அளிக்கவில்லையாம். ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. கார் வெடிப்பு சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை என்பதுதான் சோகம்

அக்டோபர் 22 நள்ளிரவு

அக்டோபர் 22 நள்ளிரவு

அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவு முபின் வீட்டில் இருந்து ஐந்து பேர் கனமான பொருட்கள் எடுத்துச்சென்றது வீடியோவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

அக்டோபர் 23 அதிகாலை

அக்டோபர் 23 அதிகாலை

அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே முபின் காரை ஓட்டிச்சென்ற போது சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் முபின் உடல் சிதறி உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டாலும் பின்னர்தான் அது தற்கொலைப்படைத்தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட சதி என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

முபின் வசித்த வீடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது. கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு முபின் பல முறை அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபினின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வரை உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

செல்போன் ஆய்வு

செல்போன் ஆய்வு

இறந்த முபினின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த செல்போனில் முபின் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர். கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+