கோயம்புத்தூரில் வேலை செய்த வீட்டில் பீரோ நிறைய தங்கம்.. கார்பெண்டர் கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
கோவை: கோயம்புத்தூரில் மதுக்கரை ரோட்டில் உள்ள பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். இவரது வீட்டில் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ மற்றும் மரத்தால் ஆன உள்அலங்கார வேலை செய்த மாதவன் என்ற தச்சு தொழில் வேலை செய்தார். இந்நிலையில் வேலை செய்த வீட்டிலேயே சுமார் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடியாக மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைக்கு தங்கம் விலை ஒரு சவரன் 81 ஆயிரம் என்கிற அளவில் விற்பனையாகிறது. இதனால் பலர் தங்கத்தை பாதுகாப்பாக வைக்க பல வழிகளை தேடுகிறார்கள். அதேபோல் திருடர்களும் அதனை திருட பல வழிகளை தேடுகிறார்கள். அதேபோல் சிலர் வீட்டு வேலைக்காக போயிருப்பார்கள். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் வீட்டில் நிறைய தங்கம் இருப்பதை பார்த்தும் சிலர் சலனப்பட்டு திருடிவிடுவார்கள். அப்படித்தான் ஒருவர் திருடியதில் சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மதுக்கரை வீடு
கோவை மதுக்கரை ரோட்டில் உள்ள பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் டேனியல் என்பவர் பிசினஸ் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்து கட்ட முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேலையை தொடங்கியுள்ளார். தனது வீட்டில் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ மற்றும் மரத்தால் ஆன உள் அலங்கார வேலையை செய்ய விரும்பியுள்ளார். அந்த பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது. கார்பெண்டர் வேலைக்கு சுந்தராபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தச்சு தொழிலாளியான மாதவன் (36) என்பவரை டேனியேல் நியமித்துள்ளார். அதன்படி அவர் அந்த வீட்டில் வேலை செய்து வந்துள்ளாராம்.
பீரோவில் தங்க நகைகள் மாயம்
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி டேனியல் தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்திருக்கிறது. உடனே அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார். அங்கு மாதவன் மட்டும் வந்து சென்றது தெரியவந்தது.எனவே அவர்தான் அந்த நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என்று டேனியலுக்கு சந்தேகமும் எழுந்தது. உடனே இவர் இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
20 பவுன் தங்கம் திருடியது எப்படி
அதை மாதவன் பார்த்துக் கொண்டே இருந்து உள்ளாராம். அந்த பீரோவில் தங்க நகைகள் நியை இருப்பதை தெரிந்து கொண்ட அவர், பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த 20 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடி உள்ளார். பிறகு பீரோவை பூட்டிய அவர் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்றது தெரியவந்திருக்கிறது. அந்த நகையின் மதிப்பு ரூ.16 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்க்கையில் மாதவனை தவிர வெளியாட்கள் யாரும் உள்ளவரவில்லை என்பது உறுதியானது.அதனால் சந்தேகத்தில் விசாரித்த போது மாட்டிக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
கோவை விபரீதம்.. நீட் தேர்வு அச்சத்தால் பிள்ளைகள் தவறான முடிவெடுப்பது ஏன்? -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications