தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு!

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவும் ஈரானும் இடையே உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம், தங்கத்தின் விலைக்கு உயர்வுக்கு புதிய வேகத்தை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வரும் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் (Fed) கூட்டம், தங்கத்தின் அடுத்தகட்ட போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புதிய Fed தலைவர் கெவின் வார்ஷின் முதல் கூட்டம் என்பதால், சந்தை முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் எரிபொருள் அச்சம், பணவீக்கம் ஆகியவை அதிகமாக இருக்கும் காரணத்தால் கெவின் வார்ஷ் எத்தகைய முடிவை எடுப்பார் என்பதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.

Gold Price

தங்கத்தின் விலை உயர்வு தொடருமா?

கடந்த ஜூன் 11ஆம் தேதி 4,024 டாலர் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது 4,343.57 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது 8.25 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். அமெரிக்கா - ஈரான் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

Fed கூட்டம்.. கெவின் வார்ஷின் முதல் சோதனை

இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டம், தங்கத்தின் அடுத்தகட்ட போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

இக்கூட்டம் புதிய Fed தலைவர் கெவின் வார்ஷின் தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், சந்தை அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக இருப்பதால், Fed பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொஞ்சம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான Bank of Japan ஜூன் 16ஆம் தேதி தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.75% இல் இருந்து 1% ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஜப்பான் நாட்டில் 31 ஆண்டுகளில் இல்லாத அதிக வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இங்கிலாந்து வங்கி (Bank of England) ஜூன் 18ஆம் தேதி வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தங்கத்தின் எதிர்கால கணிப்பு

இத்தகைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் 4,430 டாலர் முதல் 4,450 டாலர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. தங்கத்திற்கு சர்வதேச ஸ்பாட் சந்தையில் உடனடி ஆதரவு 4,300 டாலர் மற்றும் 4,250 டாலர் அளவில் உள்ளது. Fed கூட்டத்தில் dovish (மென்மையான) நிலைப்பாடு எடுக்கப்பட்டால், தங்கத்தின் விலை 4,580 டாலர் முதல் 4,600 டாலர் வரை உயரக்கூடும்.

முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை சரிவை பயன்படுத்தி வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தின் விவரங்கள் மற்றும் Fed கூட்டத்தின் முடிவுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது. ஆனால், Fed-இன் கொள்கை முடிவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து அடுத்தகட்ட போக்கு தீர்மானிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+