அரசு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி நூதன மோசடி.. உஷாரா இருங்க.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
கோவை : கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
வேலை தேடும் இளைஞர்களைக் குறிவைத்து அவ்வப்போது நூதனமான முறைகளில் மோசடியில் ஈடுபடும் கும்பலின் அட்டகாசங்கள் சமீபமாக அதிகரித்து வருகின்றன. அரசு வேலைக்கு நேர்காணல் நடப்பதாகக் கூறி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் பணிகள் காலியாக உள்ளதாகவும், மேற்படி காலிப் பணியிடங்களுக்கு ஒரு செயலி மூலம் ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதற்கு நேர்காணல் நடப்பதாகவும், இந்தப் பணிக்காக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனவும் தகவல் பரவி வருகிறது.
ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்து, அதில் தொடர்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இந்த தகவலை நம்பி யாரிடமும் பணத்தையோ அல்லது உடைமைகளையோ கொடுத்து ஏமாற வேண்டாம். கூட்டுறவு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக, அத்துறையின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற மோசடி கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற செயலிகள் மூலம் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications