ஐடி பார்க் + மால் + மெட்ரோ.. பெங்களூர், ஹைதராபாத்திற்கு செக் வைக்கும் நம்ம கோவை.. இது செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்புத்தூரை நோக்கி முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக சென்னையில் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படும் நிலையில் இன்னொரு பக்கம்.. ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. அதோடு மால்கள், மெட்ரோ பணிகள், புதிய பார்க்குகள், விரைவு சாலைகள் என்று கோவை வேகமாக முன்னேற தொடங்கி உள்ளது.

மற்ற நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில்தான் கோவையில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. நல்ல கிளைமேட், நல்ல தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால் கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. அந்த வகையில் கோவையில் மேற்கொள்ளப்படும் ஐடி முதலீடுகள் தொடர்பான முக்கியமான 3 அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாக இங்கே பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Coimbatore is becoming not just an IT hub It gets malls metro and expressways

ஐடி பார்க்குகள்

கோயம்புத்தூரில் அடுத்தடுத்து பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரண்டாம் நிலை இந்திய நகரங்களில் 2024ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதியில் கோயம்புத்தூர் கலக்கி வருகிறது.

அதன்பின் பின்வரும் 5 இரண்டாம் கட்ட நகரங்கள் மென்பொருள் ஏற்றுமதியில் வளர்ந்து உள்ளது.

*காந்திநகர்: ₹8,637 கோடி
*மொஹாலி: ₹4,228 கோடி
*ஜெய்ப்பூர்: ₹3,217 கோடி
*விசாகப்பட்டினம்: ₹2,625 கோடி
*கோவை: ₹2,548 கோடி என்று ஐடி பார்க்குகள் வர தொடங்கி உள்ளன. பொள்ளாச்சி சாலையில் 7,00,000 சதுர அடியில் ஐடிபார்க் அமைக்கப்படும் என சமீபத்தில் TANNY Shelters அறிவித்தது. கோயம்புத்தூரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலை இதன் மூலம் முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுடன் தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே ரத்தினம் & எல்&டி டெக் பூங்கா இங்கே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போது புதிதாக அமைய உள்ளது டேனியின் புதிய 7 லட்சம் சதுர அடி ஐடி பூங்கா கவனம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஐடி சேவைகளுக்கான பிரதான இடமாக கோவை மாறி வருகிறது.

கோவை மெட்ரோ

கோவையில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவையில் இதற்காக சாலைகளில் சர்வே எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கோவை மெட்ரோ கட்டுமானத்தில் தமிழ்நாடு அரசு சீரியஸாக இருக்கிறது. இதை மனதில் வைத்தே பணிகளை வேகமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ கோவையின் முக்கியமான பல பகுதிகளை இணைக்க உள்ளது. இதனால் கோவையின் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இந்த மெட்ரோ பாதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும். அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவை செம்மொழி பூங்கா

கோவையில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி 20 சதவிகித பணிகள் மட்டுமே மீதம் உள்ளன. 80 சதவிகிதம் முடிந்துள்ளது. இந்த திட்டம் தொடங்கி வெறும் 4 மாதங்களில் கட்டுமானம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் சிறை மைதானத்தில் பூங்கா கட்டம் வாரியாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோவை மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தப்படாத 45 ஏக்கர் நிலம் பகுதியில் இந்த பூங்கா அமைய உள்ளது. 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கடந்த ஜூன் 28ம் தேதி பூங்காவுக்கான டெண்டர் திறக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது.

அதற்குள் வேக வேகமாக பணிகள் 40 சதவிகிதம் முடிந்துள்ளது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மல்டி லெவல் கார் பார்க்கிங், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சேமிப்பு வசதிகள், அனுபவ மையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் திறந்தவெளி தியேட்டர் ஆகியவை திட்டத்தில் உள்ளன என்று ஆணையர் கூறியுள்ளார். சென்னையில் உள்ளதை விட பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது .


கோவை நான்குவழி சாலை

கோவை - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பாக டிபிஆர் தயாரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சாலை விரிவாக்கப்படும் செய்யப்படும் நிலையில் ஏற்கனவே இங்கே எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட உள்ளது. கோயம்புத்தூர் - கரூர் 4 வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பல்லடம் வரை ஏற்கனவே முடியும் நிலையில் உள்ளது. பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரை கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. இடையே தரைவழி பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

வெள்ளக்கோவில் முதல் கரூர் வரை ஒரு பக்கம் பணிகள் முடிந்து உள்ளன. இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்தின் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலைக்கு இணையாக கூடுதலாக இரண்டு லேன்களை இந்த சாலை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாரப்பூர்வ ஆதாரத்தின்படி, இந்த திட்டத்திற்காக மத்திய அரசு கிட்டத்தட்ட ₹400 கோடியை அனுமதித்துள்ளது. இதில், வெள்ளக்கோவில் முதல் பல்லடம் வரையிலான 47 கி.மீ., தூரத்துக்கு, 274 கோடி ரூபாய், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.


கோவை ஸ்டேடியம்

கோவையில் அமைக்கப்பட உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை சர்வதேச ஸ்டேடியமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ள நிலையில் அதற்கான அனுமதி இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திரும்பி பார்க்கும் வகையில் கோவையில் பிரம்மாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) கோயம்புத்தூரில் உள்ள ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட AAI யிடம் NOC பெற்றுள்ளது. டெண்டர்கள் மற்றும் பிற ஒப்புதல்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கே அமைய உள்ள மைதானத்தில் கிளப்ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவகம் ஆகியவையும் கட்டுமான திட்டத்தில் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தையும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தையும் நேரடி கேஸ் ஸ்டடிகளாக சிபாரிசு செய்து அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் ஸ்டேடியம்

இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும். இங்கே 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஸ்டேடியம் கட்ட உள்ளனர். ஏலதாரர்கள் ஒரு மாதத்திற்குள் ஏலத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 இல் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவையில் அடுத்தடுத்து வரும் மால்கள்

கோவையில் கட்டப்பட உள்ள பீனிக்ஸ் மால் கட்டுமான விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான 'தி ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்' கோவையில் முதலீடு செய்ய உள்ளது. ஃபீனிக்ஸ் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, தற்போது அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் 10 மால்கள் இயங்கி வருகின்றன. அதோடு இந்தியா முழுவதும் 3 மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஒரு மால் கட்டப்பட உள்ளது.

கோவை வேகமாக முன்னேறி வரும் நிலையில் அங்கே அடுத்தடுத்து பல்வேறு மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே Alveal Fun Savy Mall என்ற புதிய மால் கோவையில் கட்டப்பட்டு உள்ளது. நேதாஜி சாலை, வடவள்ளி அருகே சேரநாயக்கன்பாளையம் பகுதியில் இந்த மால் கட்டப்படுகிறது. கோவையில் ஏற்கனவே லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. இது போக கோவையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் சில நாட்களில் தொடங்க உள்ளதாம். இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் இப்போது பீனிக்ஸ் மால் அங்கே வர உள்ளது.

ரியல் எஸ்டேட் மேஜர் ஃபீனிக்ஸ் குழுமம் அவிநாசி சாலையில் ரேடிசன் ப்ளூவுக்கு அடுத்ததாக ஒரு பிரைம் லேண்ட் பார்சலை வாங்கியுள்ளது. அங்கு பிரீமியம் மால் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே லுலு மால் ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது. லுலு மால் கோயம்புத்தூர் கிட்டத்தட்ட 1.1 லட்சம் சதுர அடி இடத்தைக் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+