அழகான பொண்ணு லாட்ஜில்.. ஆயுர்வேத மசாஜ்.. கொஞ்சமும் யோசிக்கலயே.. சார் உடனே கிளம்பிட்டாரு.. கோவையில்
கோவை: கோவையில் ஒரு மோசடி கும்பலை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அந்த கும்பலிடம் விசாரணை நடத்தியதில், இன்னொரு கும்பலும் சிக்கியிருக்கிறார்கள். என்ன நடந்தது?
கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்த 22 வயது கல்லூரி மாணவர்.. இவர் சில மாதங்களுக்கு முன்பு, மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், "எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இணையத்தில் தேடினேன். அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால், முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் ஸ்டார் ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது..
போன் நம்பர்: அதனால், அதில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.. அதில் பேசிய நபர் தன்னை, குமார் என்று அறிமுகம் செய்து கொண்டு, பீளமேட்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாகவும், அங்கு உல்லாசமாகவும் இருக்கலாம் என்று சொல்லி சில பெண்களின் ஆபாச போட்டோக்களை அனுப்பினார்... அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்லவும், முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்ப வேண்டும் என்றார்..
பணத்தை நான் கட்டியதும், "ஸ்டார் ஓட்டலில் உங்களுக்காக இளம்பெண் காத்து கொண்டிருக்கிறார் என்றார். அந்த ஓட்டலுக்கு சென்ற நான், பெண் எந்த ரூமில் இருக்கிறார், அந்த ரூம் நம்பர் என்ன? என்று ஹோட்டல் ரிசப்ஷனிலிருந்து கேட்டேன்...
ரூம் நம்பர்: அதற்கு அவர், அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, ரூம் வாடகை, போலீசுக்கு தரவேண்டியது என கேட்டு, என்னிடமிருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார்.
22 வயது மாணவர், சபலத்தில் விழுந்ததால் 8 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது. இதோ இப்போதும், இதே கோவையில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது. கோவையை சேர்ந்தவர் இந்த 43 வயது நபர்.. ஆயுர்வேத மசாஜ் பெற ஆசைப்பட்டுள்ளார்.. இதற்கு இவர் இழந்த தொகை மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும்.
மசாஜ்: "லொக்காண்டா" என்ற ஆப்பில் வரும் தகவல், விவரங்களை கேட்பவர்களை குறிவைத்து, பண மோசடியை செய்து வருகிறதாம் ஒரு கும்பல்.. சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த கும்பல் போனை போட்டு, "மசாஜ், கால் கேர்ஸ் என்று பல்வேறு தேவைகளுக்கு, உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களுக்கு பெண்கள் வருவார்கள்" என்று கவர்ச்சியாக பேசுகிறார்களாம்..
அத்துடன், அழகான பெண்களின் ஆபாச போட்டோ, அவர்களின் விவரங்களை அனுப்பி வைத்து, பணத்தை பறித்து விடுகிறார்களாம். இந்த கும்பலிடம் சிக்கிதான், 43 வயதான நபர் 8.25 லட்சத்தை இழந்திருக்கிறார். கடைசியில் போலீசிலும் புகார் தந்துள்ளார்..
மோசடி: போலீசாரும், அவர் தந்த புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிபிரசாத், மகேந்திரன், சக்திவேல்,, சரவணமூர்த்தி, அருண்குமார், சக்திவேல், ஜெயபாரதி, மகேந்திரன், கோகுல், போன்றோரை பெங்களூருவில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.. இவர்கள் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள்.. இவர்கள் எல்லாருமே பெரும்பாலும் 30 வயதுக்கு கீழுள்ளவர்கள்தான்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வேறு ஒரு கும்பலை பற்றின அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோசடி கும்பல், மும்பை, பெங்களூர், கோவா பகுதியில் தங்கி மோசடியில் ஈடுபடுவார்களாம்.. இதற்காகவே, புதுசு புதுசுகா சிம்கார்டுகள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.. புது பேங்க் அக்கவுண்ட்களையும் வைத்திருக்கிறார்கள்.
துபாய்க்கு போனால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று பணத்தாசை காட்டி இளம்பெண்களுக்கு வலையை விரித்துள்ளனர்.. இப்படித்தான், சில சினிமா நடன கலைஞர்களை துபாய்க்கு அனுப்பியிருக்கிறார்கள்.. துபாய் சென்ற இளம்பெண்களை அங்குள்ள கிளப்களில் டான்ஸ் ஆடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
கிளப் டான்ஸ்: ஆனால், அந்த கிளப்பில் டான்ஸ் ஆடுவது, பெண்களுக்கு பிடிக்காததால், திருப்பூரில் உள்ள தங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லி அழுதுள்ளனர்..
இதைக்கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள், திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.. இந்த புகாரின் பேரில்4 பேரை கைது செய்து, துபாயில் சிக்கி கொண்டிருக்கும் இளம்பெண்களையும் மீட்டுள்ளனர். இந்த பெண்களை எல்லாம், துபாய்க்கு அனுப்பி வைத்தது, 19 வயதுடைய பெண்.. அதுவும் சினிமா நடனக்கலைஞராம்..!!!
அலர்ட்: சமீபகாலமாகவே, ஆன்லைன் மோசடிகள் பெருகி வருவதுடன், இதை வைத்து பணம் பறிப்பதும் அதிகமாகி வருகிறது.. வரன்கள் முதல் வேலைவாய்ப்புகள், பெண்களுடன் ஜாலியாக இருப்பது வரை அனைத்துக்கும் தனித்தனி வெப்சைட்கள் இயங்கி வருகின்றன. அதனால்தான், சைபர் கிரைம் போலீசாரும் இது குறித்து பொதுமக்களுக்கு எந்நேரமும் அட்வைஸ் தந்து வருகிறார்கள்.. அதையும் மீறி, கவர்ச்சி விளம்பரங்களில் சிலர் விழுந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது கவலையை தந்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications