கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு.. துப்பு கொடுத்தால் சன்மானம்
Recommended Video

கோவை: கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

விளையாட்டு
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

தேடல்
எங்கு தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

6 பேரிடம் விசாரணை
இந்த நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாத்தா உள்பட 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பு கொடுத்தவரின் விவரங்கள்
எனினும் சிறுமி கொலையில் துப்பு ஏதும் கிடைக்காததால் போலீஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். அதன்படி இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும். மேலும் துப்பு கொடுத்தவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

துப்பு துலங்குவர்
காவல் துணை கண்காணிப்பாளர் 94981 04407 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பெண் போலீஸார் மப்டியிலும் சென்று துப்பு துலங்குவர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications