கோவையில் விடிய விடிய கடின உழைப்பு.. வெறும் 3 நாளில் தரமான சம்பவம்.. கோயம்புத்தூர் மாநகராட்சி அசத்தல்
கோவை: கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், தொட்டிகள் கட்டுதல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நடந்தால் பொதுவாக சாலைகளை தோண்டி போட்டு சரி செய்ய அதிக நாட்கள் ஆகும். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக பல நாட்கள் நடக்க வேண்டிய சுங்கம் பகுதியில் குழாய் பதிக்கும் பணியை வெறும் ந நாளில் முடித்துள்ளனர். அங்கு சாலையும் உடனே சீரமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரம் ஒரு காலத்தில் வெறும் 60 வார்டுகளாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது கோவை மாநகராட்சி 100 வார்டுகள் ஆகிவிட்டது. இன்றும் விரிவாக்கம் செய்ய முடியும் என்கிற அளவிற்கு கோவை மாநகரம் பெரிதாகி கொண்டே செல்கிறது.இந்நிலையில் கோவை மாநகராட்சியின் பழைய 60 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், தொட்டிகள் கட்டுதல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சுங்கம் சந்திப்பில் பணிகள்
கோவை மாநகரம் திருச்சி ரோட்டில் சிவராம் நகர், வள்ளியம்மாள் லே-அவுட், புலியகுளம், லட்சுமி மில்ஸ் காலனி மற்றும் நஞ்சுண்டாபுரம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. இதற்காக கோவை-திருச்சி சாலை சுங்கம் சந்திப்பு பகுதியில் 350 மீட்டர் தூரத்துக்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த டிசம்பர் 22-ந் தேதி இரவில்தொடங்கியது. பகலில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நிலவும். எனவே தான் இரவில் மட்டும் குழாய் பதிக்கும் பணி கடந்த 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் ஒத்துழைப்பு
இந்த பணியானது நேற்று முன்தினம் காலை 7 மணி வரை இடைவிடமால் வேகமாக நடந்தது. மீண்டும் காலை 10 மணிக்கு துவக்கப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்காத அளவுக்கு நடந்தது. அதேநேரம் இரவு வரை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி கொண்டே இருந்தார்கள். இந்த பணியால் திருச்சி ரோடு, நிர்மலா கல்லூரி ரோட்டில் வந்தவர்கள் ஒலம்பஸ் பகுதியில் 'யூ-டேர்ன்' செய்து திரும்பி சென்று வந்தார்கள்.
3 நாளில் முடிந்த பணிகள்
சிவராம் நகர், வள்ளியம்மாள் லே-அவுட், புலியகுளம், லட்சுமி மில்ஸ் காலனி மற்றும் நஞ்சுண்டாபுரம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் எடுத்து செல்வதற்காக சுங்கத்தில் 3 நாளில் பணிகள் முடிந்து சாலைகளும் உடனே சீரமைக்கப்பட்டுள்ளன.
எப்படி அமைக்கப்பட்டுள்ளது
வாலாங்குளத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், சிங்காநல்லுார் குளம் சென்றடைய திருச்சி சாலையில் கான்கிரீட் பாக்ஸ் வடிவிலான வடிகால் ரோட்டுக்கு கீழ் பதிக்கப்பட்டது. அந்த வடிகால் சுங்கம் சந்திப்பை கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் வாகனங்களால் ரோட்டை தோண்டும்போது, கான்கிரீட் பாக்ஸ் உடைந்து விடக்கூடாது என்பதில், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள், கவனமாக செயல்பட்டு பணிகளை திறம்பட முடித்தார்கள்.
கோவை மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இரவு, பகல் முழுவதும் பணி நடக்கும் இடத்தில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து முடித்தார். தலைமை பொறியாளர் விஜயகுமார் தலைமையில் பணிகள் வேகமாக நடந்து முடிந்தன. நீண்ட நாட்கள் நடக்க வேண்டிய பணியை கோவை மாநகராட்சி விரைவாக முடித்துள்ளதை மக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications