கோவை அருகே பெண் அடித்துக் கொலை.. மர்ம கும்பல் கொடூரம்! அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதி!
கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி (58) என்ற பெண்மணி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தியை மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள்ளேயே புகுந்து அடித்துக் கொன்றுள்ளனர்.
பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்த சாந்தி, தனது வீட்டில் தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தி கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.

கோவையில் தொடரும் கொலைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். கோவையில் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி நவீன், 6 ஆம் தேதி அஸ்வின், ஆகஸ்ட் 10 ஆம் தேதி கல்லூரி மாணவர் அமுதன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று சாந்தி (58) என்ற பெண் வீட்டிலேயே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை சுற்று வட்டாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.


Click it and Unblock the Notifications
