5 பேருக்கு நீதிமன்ற காவல்.. கார் சிலிண்டர் வெடிப்பின் பின்னணி என்ன? பரபரக்கும் கோவை
கோவை: உக்கடம் அருகே தீபாவளிக்கு முதல்நாள் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் நேற்று அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நபர் உயிரிழந்தார்.
கார் வெடித்த பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜமேஷ் முபின்
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் ஜமேஷ் முபின் என்ற பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது. அவர் ஓட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு முன் இந்த கார் 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது.

டிஜிபி விளக்கம்
இந்த சம்பவம் விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர் என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.

வெடிமருந்து
ஜமேஷ் முபினின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும், காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் டிஜிபி கூறி இருக்கிறார். இறந்தவர் மீது வழக்குகள் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

7 பேரிடம் விசாரணை
நேற்று ஜமேஷ் முபின் மற்றும் அவருடன் சிலர் வீட்டில் இருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கிடையே ஜமேஷ் முபின் இறப்பதற்கு முதல் நாளான சனிக்கிழமை இரவு அவரோடு இருந்த 4 பேர் உட்பட 7 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது
கார் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் என்பவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்
5 பேர் மீது போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர்களை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து 5 பேரையும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications