கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோட்டத்தில் சமையல்கார பெண்ணுடன்.. தலித் இளைஞரின் காதல்.. நேரில் பார்த்துவிட்ட ஓனர்.. கடைசியில் ஷாக்

தலித் இளைஞரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

கோவை: காதலியை பார்க்க சென்றுள்ளார் ஒரு தலித் இளைஞர்.. அவரை மரத்தில் கட்டி வைத்து மிக கொடூரமாக தாக்கியது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இந்த சம்பவம் வடமாநிலங்களில் எங்கோ நடக்கவில்லை.. நம் கோவையில்தான் நடந்துள்ளது..!

கடந்த சில வருடங்களாகவே வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.. குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்தோருக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.. அச்சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்..

Corona: மாசக் கடைசியில் Corona: மாசக் கடைசியில்

இளைஞர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படிதான்.. காதலில் விழுந்த பல தலித் இளைஞர்கள், எத்தனையோ கொடுமைகளுக்கு ஆளாகும் செய்திகளையும் நாம் அவ்வப்போது படித்து கொண்டுதான் இருக்கிறோம்..

 அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

கடந்த ஜூலை மாதம் உபியில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த இளைஞனுக்கு 20 வயதுதான் இருக்கும்.. அவர் ஒரு தலித்.. உயர்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து ஊர்மக்கள் அந்த இளைஞனை கட்டி வைத்து ஊர் மக்கள் அடித்து தாக்கி உள்ளனர்... உன் ஜாதி என்ன என்று அந்த இளைஞரை அடித்து கொண்டே அங்கிருந்தோர் கேட்டார்கள்.. தன்னுடைய சாதியை இளைஞன் சொன்னதும், இந்த கும்பலுக்கு ஆத்திரம் மண்டைக்கேறிவிட்டது.. கீழே கிடந்த கல்லை எடுத்து, அந்த இளைஞனை தாக்கி, தலைமுடியை இழுத்தும், முழங்கைகளை முறித்தும் போட்டார்கள். ஒரு கம்பை எடுத்துவந்து, இளைஞனின் பின்பக்க மர்ம உறுப்பில் நுழைத்து சித்ரவதை செய்து, அந்த இளைஞன் வலியால் அலறி.. இந்த வீடியோவெல்லாம் காண்போர் மனதை பதைபதைக்க செய்துவிட்டது.

கோவை

கோவை

வடமாநிலங்களில் இவ்வாறு நிகழ்வது சகஜம் என்றாலும், நம் தமிழகத்திலும், அதிலும் ஸ்மார்ட் சிட்டியான கோவை மாவட்டத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அந்த இளைஞர் பெயர் ஹரிஹரசுதாகர்.. 18 வயதுதான் ஆகிறது.. தலித் வகுப்பை சேர்ந்தவர்... ஆனைமலை அருகே உள்ள சக்தி நகரில் வசித்து வந்துள்ளார்.. அதே பகுதியை சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில், 5 வருடங்களாக கூலி வேலை செய்து வந்துள்ளார்..

காதல்

காதல்

இந்த தோட்டத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் சமையல் வேலைக்கு வந்தார்... அவர் மதுரையை சேர்ந்தவர்.. 22 வயதாகிறது.. ஒரே தோட்டத்தில் இருவருமே வேலை செய்ததால், இவர்களின் பழக்கம் காதலாக மாறி உள்ளது.. தோட்டத்தில் இருவருமே சந்தித்து பேசி வந்துள்ளனர்.. ஒருநாள் இவர்களி.ன காதல், அந்த தோட்டத்தின் ஓனர் ராமசாமிக்கு தெரிந்துவிட்டது.. அதனால், ஹரிஹரசுதாகரை கூப்பிட்டு, இனிமேல் வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்ள கூடாது என்று கண்டித்தார்.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

இதனிடையே, ஹரிஹரசுதாகர் அந்த தோட்டத்தில் இருந்து திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்... வேறு ஒரு தோட்டத்தில் இளநீர் பறிக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.. அங்கு சென்றதும், காதலியுடன் செல்போனில் பேசி வந்தார்... இந்த விஷயம் பழைய ஓனர் ராமசாமிக்கும், அவரது மனைவிக்கும் தெரியவந்தது. இதையடுத்து ராமசாமியின் மனைவி, 15 நாட்களுக்கு முன்பு ஹரிஹரசுதாகரின் பெரியம்மாவை சந்தித்து, உங்க மகன் எங்க வீட்டில் வேலை பார்க்கும் சமையல்கார பெண்ணிடம் போனில் பேசி வருகிறார்.. கண்டித்து வையுங்கள் என்று சொல்லி உள்ளார்..

ஆத்திரம்

ஆத்திரம்


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரசுதாகர், பழைய ஓனர் ராமசாமி வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. அங்கு வாசலில் நின்றுகொண்டு, வீட்டுக்குள் இருக்கும் காதலியை வெளியில் வர சொல்லி கூப்பிட்டுள்ளார்.. ஆனால் அந்த பெண் வெளியே வராததால், காம்பவுண்ட் சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்திருக்கிறார்.. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்கள் ஆத்திரம் அடைந்து, தோட்டத்திற்குள் ஹரிஹரசுதாகரை அழைத்து சென்றனர்...

இளைஞர்

இளைஞர்

அங்கே தோட்டத்தில் கிடந்த மூக்கணாங்கயிறு எடுத்து ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்... கட்டையை எடுத்து இளைஞரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர்.. முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் கொட்டி வலியால் அலறினார் இளைஞர்... சிறிது நேரத்தில் அப்படியே மயங்கியும் விழுந்தார்.. இது அத்தனையையும் ஓனர் ராமசாமி உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. பிறகு ஒருகட்டத்தில் இளைஞரின் கட்டை அவிழ்த்து விட்டனர்..

சிகிச்சை

சிகிச்சை

இனி இந்த பக்கம் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.. இளைஞரும் மயங்கிய நிலையிலேயே வீட்டுக்கு சென்றுள்ளார்.. பிறகுதான் வீட்டிலிருந்தோர் ஹரிஹர சுதாகரை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக வேட்டைக்காரன் புதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. நடந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசிலும் புகார் தந்தனர்.. இறுதியில் ஹரிஹரசுதாகரை தாக்கியதாக ஓனர் ராமசாமி, கேசவன், ராமன், காளிமுத்து, ராசாத்தி, 2 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

கைது

கைது

இந்த சம்பவம் கோவை மாவட்டம் எங்கும் பரவியது.. ஒரு தலித் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் பொள்ளாச்சி அனைத்து இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

English summary
Dalit youth attack and case filed against seven near coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X