மருதமலையே களைகட்டப் போகுது.. முருகர் பக்தர்களே நோட் பண்ணுங்க.. முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெறும் சூரசம்ஹார திருக்கல்யாண விழாவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முருக பக்தர்களுக்குப் பிடித்த கோயில்களில் பிரதான இடம்பிடித்திருப்பது மருதமலையாகத்தான் இருக்கும். முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் மருதமலை கோவை மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது.
இக்கோயிலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சூரசம்ஹார திருக்கல்யாணத்துக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் மாதம் 2 ம் தேதி காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் சூரசம்ஹார திருக்கல்யாண விழா தொடங்குகிறது.
நவம்பர் 8 ம் தேதி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்களும், பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். என்று தெரிவித்து உள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விநாயகர் பூஜை, கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சி, நவம்பர் 2 முதல் 8 ஆம் தேதி வரை யாகசாலை பூஜை, சுவாமி திருவீதி உலா, அபிஷேக பூஜை நடைபெறவுள்ளது.
அதேபோல, நவம்பர் 7 ஆம் தேதி வேல் வாங்குதல், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல், அன்னையிடம் வேல் வாங்குதல், உற்சவரிடம் சண்முகார்ச்சனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவாக நடைபெறவுள்ளது.
நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு: கந்தசஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண விழாவையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் மலையில் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications