தகர பெட்டியோடு வந்தவருக்கு.. பூர்வீக நிலம் மட்டும் 76 ஏக்கர்.. அண்ணாமலையின் சொத்து மதிப்பு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். முக்கியமாக அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கட்டப்பட்ட சொத்து மதிப்பை பகிர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாங்க 2002-ல் கோவைக்கு வந்தப்ப.. அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) ஒரு எம்.எல்.ஏ. அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர் சிங்கை ராமச்சந்திரன். இதுதான் வாரிசு அரசியல். ஆனால் 2002-ல் முதன் முதலாக நான் கோவைக்கு எதுவும் இல்லாமல் வந்தேன்.

Do you know the asset details of Annamalai The BJP canidate of Coimbatore

எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்னைக்கு எனக்கு வயது 17. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம்.

பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன்., என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

விமர்சனம்: எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

முக்கியமாக அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கட்டப்பட்ட சொத்து மதிப்பை பகிர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் அவர் தன்னுடைய அசையும் சொத்தின் மொத்த மதிப்பு 46 லட்சம் ரூபாய் , தன்னுடைய மனைவியின் அசையும் சொத்து மதிப்பு 94 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்களாக பூர்வீகமா 76 ஏக்கர் நிலம் உட்பட பல நிலங்களை பட்டியலிட்டு உள்ளார்.

1 கோடி ரூபாய் மதிப்பிற்கு இவர் நிலங்களை பட்டியலிட்டுள்ளார். அதே சமயம் இவரின் மனைவிக்கு 50 லட்சம் ரூபாயில் அசையா சொத்து உள்ளதாக கூறி உள்ளார்.

அசையா சொத்துக்களாக பூர்வீகமா 76 ஏக்கர் நிலம் இருந்த போது தன்னை ஏழை போல சித்தரித்து பேண்ட் போட்டுகிட்டு எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே சமயம் பாஜக ஆதரவாளர்களோ.. அவர் கோவைக்கு படிக்க சென்றார். அப்போது தகர பெட்டியில் துணி எடுத்து செல்வதே வழக்கம். கையில் நிலத்தையா எடுத்து செல்ல முடியும். இதை போய் பெரிய தவறாக சித்தரித்துக்கொண்டு இருக்கிறீர்கள். தகர பெட்டி அப்போதெல்லாம் இயல்பான விஷயம்.. இதை போய் கிண்டலடிக்கலாமா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+