அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தில் சோகம்.. விபத்தில் பேத்தி பலி!
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி கோவை அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு அருகே நடந்த விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்யப்பிரியா (28) உயிரிழந்தார். காரில் சென்ற மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்யப்பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார்.
இன்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றுள்ளனர். பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்தார். மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது, கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதி லேசான காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யப்பிரியா, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications