கோவை டூ ராஜஸ்தான்.. இனி சல்லுன்னு போயிடலாம்.. கோயம்புத்தூருக்கு ஹேப்பி.. சேலத்துக்கும் குஷி.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இருந்து சேலம் வழியே ராஜஸ்தானுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடமாநிலங்களில் வெகு சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி பண்டிகையாகும்.. இது வருகிற 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

Fantastic Announcement for Holi Festival and special train Coimbatore to Rajasthan via Salem by Southern railway

இதற்காக, கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு ஹோலி பண்டிகை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இப்படி ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிறப்பு ரயில்கள்: ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி ஸ்டேஷனுக்கு , இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதில், "கோவை-பகத் கி கோதி சிறப்பு ரயில் (06181) இன்று (14ம் தேதி) முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் (4 சேவை) இயக்கப்படுகிறது.

சேலம்: கோவையில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு அதிகாலை 3.13க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 4.05க்கும், சேலத்திற்கு அதிகாலை 5.15க்கும் வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சக்குடா, நான்டெட், சூரத், அகமதாபாத் வழியே பகத் கி கோதிக்கு சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், பகத் கி கோதி-கோவை சிறப்பு ரயில் (06182) வரும் 17ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஞாயிறு தோறும் (4 சேவை) இயக்கப்படுகிறது. பகத் கி கோதியில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு புதன்கிழமை அதிகாலை 5.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், ஈரோட்டிற்கு காலை 6.20க்கும், திருப்பூருக்கு காலை 7.03க்கும் சென்று கோவையை காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.

ரயில்வே ஸ்டேஷன்: இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, மகப்பூப் நகர், காச்சிகுடா, நிஜாமாபாத், பூர்னா, வாசிம், அகோலா, சூரத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+