தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை எவ்வளவு? கோவையில் மட்டும் ரூ.90 கோடியா? செந்தில் பாலாஜி பதில்
கோவை: தீபாவளியையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு ? கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.90 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபானம் என்பது அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறதுது.

தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய்களில் டாஸ்மாக் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தான் தமிழக அரசு சார்பில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. இதற்கிடையே தான் தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் அதிகளவில் விற்பனை என்பது இருக்கும்.
குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். அதோடு இந்த சமயங்களில் அரசு சார்பில் டார்கெட் நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும் பெரிய குற்றச்சாட்டுகள் இன்றளவும் உள்ளது.
அதோடு அதிக விற்பனை உள்ள டாஸ்மாக்குகளில் கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்த சர்ச்சைக்கு நடுவே தான் நேற்று தீபாவளி தினத்தில் தமிழகம் முழுவதும் மதுவிற்பனை என்பது களைகட்டியது. டாஸ்மாக் திறந்த உடனேயே குடிமகன்கள் வரிசையில் நின்று சரக்கு பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தான் கோவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டனர். இந்த வேளையில், நிருபர் ஒருவர்‛‛நேற்றைய தினம் தீபாவளி.. தீபாவளி டாஸ்மாக்கில் விற்பனை எவ்வளவு வந்தது?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, ‛‛கேட்டுவிட்டு சொல்கிறேன். ஏனென்றால் நேற்றும், இன்றும் அரசாங்க விடுமுறை. இதனால் கேட்டுவிட்டு எவ்வளவு என்று சொல்கிறேன்'' என சிரித்தபடி கூறினார்.
ஆனாலும் விடாத பத்திரிகையாளர், ‛‛கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.90 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது என்று ஒரு தகவல் போய் கொண்டிருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி, ‛‛எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும். ஏனென்றால் நேற்று இரவு 10 மணிக்கு தான் கடையை சாத்தியிருப்பார்கள். நாம் இன்று நல்ல நிகழ்ச்சியில் இருக்கிறோம். இரவு 10 மணிக்கு கடை மூடியபிறகு இன்று மதியத்துக்குள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். முடியட்டும். பார்க்கலாம்'' என்றார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications