தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை.. தொண்டனாகவே தொடர்வேன்.. அண்ணாமலை அறிவிப்பு
கோவை: தமிழ்நாடு பாஜகவுக்கான புதிய மாநில தலைவருக்கான போட்டியில் தாம் இல்லை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக யாரையும் கை காட்டவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ள அவர், டெல்லிக்கும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவருக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற பின், தமிழக பாஜக தலைவர் தேர்வு இருக்கும் என்று கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தம்பிதுரை, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.

இதன் காரணமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதிமுக தரப்பில் தமிழ்நாட்டின் நன்மைகளுக்காகவே சந்தித்ததாக கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது அதிமுக தரப்பில் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப சட்டசபையிலும் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக தலைவர்கள் நெருக்கம் காட்டினர். இதனால் பாஜக மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை இல்லை. என்னை பொறுத்தவரை பாஜக கட்சி நன்றாக இருக்க வேண்டும், நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி, நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி. இந்த கட்சிக்காக ஏராளமானோர் உயிரைக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
அதனால் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். தமிழக பாஜகவில் அனைவரும் சேர்ந்து ஒரு தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வோம். அதனால் போட்டி என்பது இருக்காது. என்னுடைய பணி தொண்டனாக தொடரும். 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கு மிகவும் முக்கியம். தொண்டனாக கட்சியின் பணிகளை செய்வேன். டெல்லிக்கு செல்லப் போவதில்லை. தமிழ்நாட்டில்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications