கர்நாடக சட்டசபை தேர்தல்! குமாரசாமிக்காக கோவையில் தயாராகும் பிரச்சார வேன்! குவியும் ஆர்டர்கள்!
கோவை: கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமிக்காக கோவையில் பிரத்யேக பிரச்சார வேன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தின் போது எந்த அயர்வும், இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து சவுகர்யங்களுடன் கூடிய பிரச்சார வாகனம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோவையை பொறுத்தவரை கோயாஸ், ஜீப் கிளினிக் என பல நிறுவனங்கள் வாகன உட்கட்டமைப்பை மேம்படுத்தி தருகின்றன.

கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக் கூடும் என்பதால் இப்போதே அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் கவனிக்கத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கர்நாடகாவில் ராகுல் ஒரு பக்கம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக மேல் மட்டத்தலைவர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தொடர்ந்து கர்நாடகாவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேலாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பிரச்சார களத்துக்கே தயாராகிவிட்டார்.

பிரச்சார வாகனங்கள்
இதனிடையே குமாரசாமிக்காக கோவையில் பிரத்யேக முறையில் பிரச்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹை குவாலிட்டி ஆடியோ, ஃபோகஸ் லைட், மக்களை பார்ப்பதற்கு ஏதுவாக படிக்கட்டுகள், கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட லோகோ ஸ்டிக்கர் என குமாரசாமிக்காக பார்த்து பார்த்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரச்சார வேன் மட்டுமல்லாமல் பிரச்சாரத்துக்காக திறந்தவெளி ஜீப்களும் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம்
ஏ டூ இசட் எல்லா பணிகளும் நிறைவடைந்து டிசம்பர் மாதத்திற்குள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் அவர்கள் ஆர்டர் செய்த பிரச்சார வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதமோ குமாரசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே குமாரசாமிக்காக கோவையில் உள்ள ஜீப் கிளினிக் நிறுவனத்தில் இரவு பகலாக வேலைகள் நட்ந்து வருகின்றன.

கோவையில் அதிகம்
பிரச்சார வாகனங்களை கஸ்டமைஸ் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் கோவையில் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றில் கோயாஸ் நிறுவனத்திற்கும், ஜீப் கிளினிக் நிறுவனத்திற்குமே ஆர்டர்கள் அதிகம் குவிந்து வருகின்றன. காரணம் இந்த இரண்டு நிறுவனங்களின் பணிகளும், உட்கட்டமைப்பு வசதிகளும் தலைவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதே. இதனிடையே ஜீப், வேன்களை தவிர்த்து பிரத்யேக முறையில் பிரச்சார பேருந்தும் குமாரசாமிக்காக பெங்களூருவிலேயே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications