Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளிக்காட்டு இதிகாசம் ஹீரோ ரஜினி? இளையராஜா பற்றி கேள்வி..தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளேன்-வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

கோவை : இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் நான் இந்த கேள்விக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன் என பதிலளித்ததோடு, கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்துவிற்கு இன்று 70ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது.

அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை "வைரமுத்து இலக்கியம் 50" என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

இந்நிலையில் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இந்த 50 ஆண்டுகளில் நான் சாதித்தது எதுவும் இல்லை எனவும் நான் பெற்ற விருதுகள் எல்லாம் சாதனைகள் என சொல்லிவிட முடியாது எனவும் அவை எல்லாம் உடன் விளைவுகள் என தெரிவித்தார். இனிமேல் தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன ஊட்ட கருத்துக்கள் சொல்ல வேண்டும்? புத்தம் புதிய படைப்புகள் என்ன படைக்க வேண்டும்? இருக்கின்ற இடைவெளியை எப்படி நிரப்ப வேண்டும்? என்று சிந்திக்க கூடிய வயதில் நான் இருக்கிறேன் எனக் கூறினார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் படம்

கள்ளிக்காட்டு இதிகாசம் படம்

மாணவர்களுக்கு தமிழ் கட்சி கொடுத்தால் தான் அடுத்த தலைமுறை வளரும் என தெரிவித்தார். ஆசிரியர்க்ள் என்பவர்கள் கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும் அல்ல, கற்பதை நிறுத்தாதவர்கள் என்றுதான் நான் கருதுகிறேன் என கூறினார். மேலும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அறிஞர்களும் அரசுத்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டால் இதற்கெல்லாம் நிவாரணம் காண முடியும். மேலும் மிக நல்ல படைப்புடன் விரைவில் தமிழ் மக்களை சந்திப்பேன். கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்ற பல இயக்குனர்கள் தன்னை கேட்டதாகவும், அப்போது என்னிடம் ஒரு தயக்கம் இருந்தது

ரஜினிகாந்த் ஹீரோ

ரஜினிகாந்த் ஹீரோ

நாவல் படமாக்கப்படுகின்ற பொழுது இரண்டு விதமான விளைவுகள் உண்டு அதாவது, நாவலை இருப்பதை விட சிறப்பாக எடுத்துக்காட்டுவது ஒன்று மற்றொன்று நாவலில் இருப்பதை விட குறைவாக மாறிவிடுவது என இரண்டு உண்டு என தெரிவித்தார். மேலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த அவர் ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும்

இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவிடம் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 'நான் இந்த கேள்விக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்' என கூறி கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+